வியாழன், 1 ஏப்ரல், 2010

ஊர்வாசியும், அயல்வாசியும்....

கோவையில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை எதிர்த்து இந்துமக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

-செய்திப்பற்றிய உரையாடல் .

ஊர்வாசியும், அயல்வாசியும்
அயல்வாசி:ஏம்பா அங்கே என்னக்கூட்டம்?

ஊர்வாசி:யோவ்! ஆறேழு பேர் நிக்கறதெல்லாம் ஒரு கூட்டமாய்யா?

அயல்வாசி:சரி சரி விடுப்பா! என்ன சேதியாம்?

ஊர்வாசி:அதான் வேலவெட்டியில்லாத பயலுக ஏதாவது பிரச்சனையை கிளப்பணும்னு ஆர்ப்பாட்டம்னு கிளம்பிட்டானுக.

அயல்வாசி:விஷயத்துக்கு வாப்பா? ஊர்வாசி:அதான் நம்ம சானியா மிர்சா தெரியும்ல?

அயல்வாசி:ஆமாம், பந்தாட்டமெல்லாம் ஆடுமே அந்தப்பொண்ணா?

ஊர்வாசி:ஆமாம்!அந்தப்பொண்ணு கல்யாணம் பண்ணிக்க போகுதாம்

அயல்வாசி:அடப்பாவிகளா! கல்யாணம் முடிப்பது தப்பா?

ஊர்வாசி:யோவ் அவசரப்படாதே!விஷயத்தைக்கேளு!அந்தப்பொண்ணு முடிக்கப்போறது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரு சோயப்.

அயல்வாசி :ஓஹோ! அதான் பிரச்சனையா?ஆமாம்! அந்தப்பொண்ணு சம்மதத்தோடத்தானே இந்தத்திருமணம் நடக்கப்போகுது?

ஊர்வாசி :அவங்க ரெண்டு பேருக்கு 7 வருசமா பழக்கமாம்.ரெண்டு வீட்லயும் சம்மதிச்சுட்டாங்க.

அயல்வாசி :அப்ப இவனுக எதுக்கு இப்படி ஆர்ப்பாட்டம் பண்றானுக!

ஊர்வாசி :இந்தப்பயலுகளுக்குத்தான் தேசப்பக்தி ரொம்பக்கூடிப்போச்சே!

அயல்வாசி:அதுசரி!முன்னாடி இந்தப்பொண்ணு அரைகுறை ஆடையில டென்னிஸ் ஆடுவது இஸ்லாத்துக்கு முரணானது என்று ஃபத்வா கொடுத்தப்ப இவனுக எல்லாம் ஆடை அணிவது அந்தப்பொண்ணுக்க உரிமை அதில் எல்லாம் மதம் தலையிடக்கூடாதுன்னு வக்காலத்து வாங்கினார்களே!கல்யாணத்துக்கு மாப்பிள்ளையை மட்டும் செலக்ட் பண்ண அந்தப்பொண்ணுக்கு உரிமையில்லையா?

ஊர்வாசி:யோவ்! என்னட்ட கேட்டு என்ன பிரயோசனம் !அவனுக கிட்டப்போய் கேளு!

அயல்வாசி:அது சரி அவனுக யாருன்னு சொல்லலையே நீ?

ஊர்வாசி:பார்த்தா தெரியல! அதான் நித்யானந்தா சாமிக்க அசிங்கமெல்லாம் சன் டிவியில ஒளிபரப்பானப்ப ஆ ஊன்னு கத்தி களேபரம் பண்ணிட்டு இவங்க முன்னாள் தல அதான் ராமகோபால அய்யரு நித்யானந்தா ஹிந்துமதத்துக்கு சேவை செஞ்வரு அதனால கம்னு கிடங்கய்யானு சொன்னதும் காணாமப்போன இந்து மக்கள் கட்சிக்காரனுக இவனுக.

அயல்வாசி:அப்படியா?சரி இவங்க குடும்ப கட்சியான பா.ஜ.க வின் முன்னாள் தலைவரு அதான் நம்ம இரும்பு மனுஷன் அத்வானி பாகிஸ்தான் சிந்துவிலிருந்து இந்தியா வந்து நம்ம பொண்ணையல்லவா கல்யாணம் பண்ணிக்கிட்டாரு! அவருக்குத்தானே இவனுக பா.ஜ.க தலைவர், துணை பிரதமர், உள்துறை அமைச்சர் என பதவியை அள்ளிக்கொடுதானுக! சானியாவுடைய பதக்கத்தை பறிக்கணூம்னா அத்வானி வகித்த இந்தப்பதவிகளையும், அனுபவித்த பதவி சுகங்களையும் எப்படி பறிக்கிறது?

ஊர்வாசி:யோவ்! நீ எங்கேயோ கையை வைக்கிற! கப்சிப்னு இரு! நமக்கெதுக்கு வம்பு!

அயல்வாசி:அதுசரிதான்!உண்மையைச்சொன்னா நம்மளயும் ஐ.எஸ்.ஐ ஏஜண்டுனு சொல்லுவானுக! அந்துலேயை சொன்னதுபோல!

-பாமரன்

0 கருத்துகள்:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP