சனி, 22 மே, 2010

குண்டக்க மண்டக்க!


page.jpg

வணக்கம் நேயர்களே! இது உங்கள் அபிமான சேட்டை டி.வியின்
 'குண்டக்க..மண்டக்க' நிகழ்ச்சி! இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில்
கலந்து கொள்வதற்காக ஆளுங்கட்சியைச் சேர்ந்த திரு. சுரண்டலூர்
சுப்பாமணியும்
எதிர்க்கட்சியைச் சேர்ந்த திரு.கொட்டாவிப்பாளையம்

 குருவப்பனும்
வந்திருக்கிறார்கள். வணக்கம் திரு.சுப்பாமணி அவர்களே!
வணக்கம் திரு.குருவப்பன் அவர்களே!

சுப்பாமணி: வணக்கம்!

குருவப்பன்: வணக்கம்!

சேட்டை: இன்று மாலை மத்திய போக்குவரத்துத் துறை செயலாளர் ஒரு
அறிவிக்கை வெளியிட்டிருக்கிறார். அதன்படி, இனிமேல் தேசிய நெடுஞ்சாலையில்
பயணம் செய்கிற சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்
டோல்கேட்டில் பணம் செலுத்த வேண்டாம்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆளுங்கட்சிப் பிரதிநிதியாக இது குறித்து பொதுமக்களுக்கு நீங்கள்
 என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

சுப்பாமணி: இது வரவேற்கத்தக்க விஷயம்! நாங்கள் எங்களுக்காகவே
மக்கள் வாழ்க்கையை  அர்ப்பணித்துக்...மன்னிக்கவும்...மக்களுக்காகவே
 எங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்! மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களிடம் ஒவ்வொரு முறையும் தேசிய
நெடுஞ்சாலையில் இப்படி பெருந்தொகையை வசூலித்தால் எப்படி
நாங்கள் மக்களுக்கு சேவை செய்ய முடியும்?

சேட்டை: ஐயா! குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்! வெறும் முப்பது
ரூபாய் தானே டோல்-கேட்டில் வசூலிக்கிறார்கள்? அதைக் கூடவா
 உங்களால் கொடுக்க முடியாது?

சுப்பாமணி: முப்பது ரூபாயா? மீது தொள்ளாயிரத்துத் தொண்ணூத்தி
ஒன்பது காருக்கு யாரு காசு கொடுக்கிறது? பொதுவாழ்க்கையில்
ஈடுபடத் தொடங்கிவிட்டால் பாத்-ரூம் தவிர வேறு எங்குமே தனியாகப்
போக முடியாதல்லவா? ஒவ்வொரு வாட்டியும் முப்பதாயிரம்,
நாற்பதாயிரம் என்று கொடுத்தால் அப்புறம் சம்பாதிக்கிறதெல்லாம்...
அதாவது, வாங்குற சம்பளம் எல்லாம் திரும்ப அரசாங்கத்துக்கே
 போயிடாதா?

சேட்டை: திரு.குருவப்பன் அவர்களே! எதிர்க்கட்சியின் பிரதிநிதியாக
இது குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

குருவப்பன்: இது அதிகார துஷ்பிரயோகம்! மக்களின் வரிப்பணத்தை
வீணடிக்கிறார்கள்! இதைக் கண்டித்து நாளை முதல் தமிழ்நாட்டின்
எல்லா டோல்-கேட்டுகளின் முன்பும் எங்கள் கட்சித்தொண்டர்கள்
கோல்கெட் பேஸ்ட்டால் பல்துலக்கி நாடுதழுவிய போராட்டத்தை
மேற்கொள்வார்கள்.

சுப்பாமணி: சேட்டை! இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதித்தபோது,
இதனால் பொதுமக்களின் வரிப்பணத்திற்கு இழப்பு ஏற்படாமல் இருக்க
 ஒரு யோசனை சொன்னோம். அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற
உறுப்பினர்களுக்கும் ஆளுக்கு ஒரு ஹெலிகாப்டர் வழங்கினால்
அவர்கள் டோல்-கேட்டில் பணம் கட்ட வேண்டிய அவசியமே இருக்காது
என்று நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால், இந்தியாவில் அந்த அளவு
எண்ணிக்கையில் ஹெலிகாப்டர் டிரைவர்களும் ஹெலிகாப்டர்
 கிளீனர்களும் கிடையாது என்பதால் அந்த யோசனை கைவிடப்பட்டது.

குருவப்பன்: டிரைவர் இல்லாவிட்டால் என்ன? எல்லா ஆளுங்கட்சி
உறுப்பினர்களும் ஹெலிகாப்டர் ஓட்டக் கற்றுக்கொள்ளலாமே?

சுப்பாமணி: முதலில் நீங்கள் கற்றுக்கொள்வீர்களா குருவப்பன்?
உங்கள் கட்சிக்காரர் ஹெலிகாப்டர் ஓட்டப் பயிற்சி பெற்றாரே, என்ன நடந்தது?

சேட்டை: என்ன நடந்தது?

சுப்பாமணி:  ஹெலிகாப்டர் ஆகாயத்தில் பறந்தபோது, 'ரொம்பக் குளுருது,'ன்னு
ஹெலிகாப்டர் மேலே சுத்திக்கிட்டிருந்த ஃபேனை ஆஃப் செய்து விட்டார்!

குருவப்பன்: இது அப்பட்டமான அவதூறு! மத்திய அரசு மலிவாய்க் கிடைக்கிறது
என்று யூகோஸ்லாவியாவிலிருந்து ஹெலிகாப்டர்களை இறக்குமதி செய்து
விட்டார்கள். அதில் மேலே போக ஒரு பொத்தான், வலது பக்கம் போக ஒரு
பொத்தான், இடது பக்கம் போக ஒரு பொத்தான் என்று மொத்தமே மூன்று
பொத்தான்கள் தானிருந்தன. கீழே இறங்குவதற்குப் பொத்தானே இல்லை!
ஏன் என்று கேட்டால், கமிஷன் தொகை அதிகமாகக் கொடுத்துக்
கட்டுப்படியாகததால் அந்த ஒரு பொத்தானை மட்டும் வைக்காமல்
விட்டு விட்டோம் என்று சொல்லி விட்டார்கள். பரங்கிப்பேட்டையிலிருந்து
பறந்த எங்களது கட்சிக்காரர் இறங்கத் தெரியாமல் பாராமுலா வரைக்கும்
 போய்விட்டார்! இனிமேல் அவரை பாகிஸ்தான்காரர்கள் இறக்கினால் தான் உண்டு.

சேட்டை: திரு.குருவப்பன்! இது போன்ற விஷயங்களைப் பற்றி ஆளுநரிடம்
முறைப்படி புகார் கொடுக்காமல் தினசரி ஏன் போராட்டங்களிலேயே ஈடுபடுகிறீர்கள்?
அண்மையில் கூட தேனாம்பேட்டை சிக்னல் அருகே உங்கள் தலைமையிலே
தொண்டர்கள் தீக்குளிக்கப்போவதாக பரபரப்பை ஏற்படுத்தினீர்களே?

சுப்பாமணி: அதெல்லாம் அவர்களது நாடகம்! இவர்கள் தீக்குளிப்பதாகச்
சொன்னதும் சாலையில் போக்குவரத்தே ஸ்தம்பித்து விட்டது! பொதுமக்கள்
அவரவர் வாகனங்களிலிருந்த பெட்ரோலைக் காலி செய்து பாட்டிலில்
நிரப்பி இவர்களிடம் கொடுப்பதற்குள்ளாகவே எதிர்க்கட்சித்தொண்டர்கள்
"போராட்டம் வெற்றி!" என்று கோஷம் போட்டுக்கொண்டு தலைதெறிக்க
ஓடி விட்டார்கள்!

சேட்டை: விவாதம் திசைதிரும்புகிறது! சுப்பாமணி அவர்களே! அரசாங்க
கஜானாவுக்கு முப்பது ரூபாய் கூட கொடுக்க விரும்பாத அரசியல்வாதிகள்
 என்று மக்கள் குற்றம் சாட்ட மாட்டார்களா?

சுப்பாமணி: இது தவறான கருத்து! மக்களுக்காக நாங்கள் எவ்வளவு
வேண்டுமானலும் செலவழிக்கத் தயார் என்பது அவர்களுக்குத் தெரியாதா?
 சந்தேகமிருந்தால் அடுத்த இடைத்தேர்தலின் போது அதை மீண்டும்
நிரூபித்துக்காட்டுகிறோம். எங்களது சவாலை சந்திக்க எதிர்க்கட்சிகள்
தயாரா என்று சூளுரை விடுகிறேன்.

குருவப்பன்: மிகவும் குறுகிய கண்ணோட்டத்தோடு நிறைவேற்றப்பட்ட
 கோரிக்கை இது! எங்கள் வசம் வாகனங்கள் அதிகமில்லை என்பதற்காகவே
 திட்டமிட்டு இப்படியொரு சதித்திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
அடுத்த முறை எங்களது ஆட்சி மலர்ந்தால் இதை நாங்கள் கண்டிப்பாக
மாற்றியமைப்போம்.

சேட்டை: எப்படி? மீண்டும் எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற
 உறுப்பினர்களும் டோல்-கேட்டில் பணம் செலுத்த வேண்டும் என்று சட்டம்
 நிறைவேற்றுவீர்களா?

குருவப்பன்: இல்லவே இல்லை! சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு
 அளித்தால் மட்டும் போதாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்கள்
பிரதிநிதிகளுக்கு இலவசமாக பெட்ரோலும் டீசலும் வழங்கப்பட வேண்டும்
என்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.

சுப்பாமணி: நீங்கள் இப்படி ஏறுக்கு மாறாக கோரிக்கை வைப்பீர்கள் என்று
தெரிந்து தான், மக்கள் பிரதிநிதிகளின் வாகனங்களுக்கு காப்பீட்டிலிருந்து
விலக்கு அளிக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்திருக்கிறோம்.

குருவப்பன்: நீங்கள் கோரிக்கை தானே வைப்பீர்கள்? நாங்கள் மக்கள்
பிரதிநிதிகளின் வாகனங்களுக்கு சுங்கவரி, கலால்வரி, உற்பத்தி வரி,
விற்பனை வரி, ஜனவரி, பிப்ருவரி, முகவரி போன்ற அனைத்திலிருமிருந்து
 விலக்கு வேண்டுமென்று நாடுதழுவிய போராட்டம் நடத்துவோம்.

சுப்பாமணி: நீங்கள் வரிவிலக்கு மட்டும் தானே கேட்பீர்கள்? நாங்கள் அனைத்து
மக்கள் பிரதிநிதிகளுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பி.எம்.டபூள்யூ, டயோட்டா,
மிட்சுபிஷி,ஹூண்டாய், ஹோண்டா போன்ற வாகனங்களையே இலவசமாக
வழங்கக்கோரி விட்டோம்.

சேட்டை: என்னது, எல்லா அரசியல்வாதிகளுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும்
இலவசமாக கார் கொடுப்பதா? பொதுமக்கள் இனிமேல் மாட்டுவண்டியில் போக
வேண்டியது தானா?

குருவப்பன்: சேட்டை! கட்சி அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறது.
பேசிமுடித்து விட்டு வருகிறேன்.

சேட்டை: சரி, பேசுங்கள்! சுப்பாமணி அவர்களே! இப்படியே பணமே செலுத்தாமல்
 இலவசமாக எல்லாம் நடந்தால் கஜானா காலியாகி விடாதா?

சுப்பாமணி: நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் அல்லவா? மக்கள் மட்டும் எல்லாம்
 இலவசமாய் பெறலாம். நாங்கள் பெறக்கூடாதா?

குருவப்பன்: சரியாகச் சொன்னீர்கள் சுப்பாமணி!

சேட்டை: என்னது, எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு ஆளுங்கட்சியை
ஆதரிக்கிறீர்கள்?

குருவப்பன்: யார் எதிர்க்கட்சி? நான் போட்டிருக்கிற சட்டையில் ஒரு
 பொத்தான் இல்லையாம். அதனால் கட்சிவிரோதச் செயல்பாட்டுக்காக
என்னை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியிருப்பதாக இப்பொது தான்
போன் வந்தது. சுப்பாமணி அண்ணே, போகும்போது அப்படியே
என்னையும் உங்க கட்சிக்குக் கூட்டிக்கிட்டு போறீங்களா?

சுப்பாமணி: வாங்க வாங்க! ஆனா, என் தொண்டர்கள் நிறைய பேரு
காத்திட்டிருக்காங்க! நீங்க உங்க வண்டியிலேயே பின்னாலேயே வர்றீங்களா?

குருவப்பன்: அதனாலென்ன அண்ணே, நான் பாட்டுக்கு டிக்கியிலே உட்கார்ந்து
 கிட்டு வர்றேன். நம்ம கட்சி அலுவலகம் வரைக்கும் தானே? ஹிஹி!

சேட்டை: முடிவா இந்தப் பிரச்சினையைப் பத்தி என்ன சொல்றீங்க
குருவப்பன் அவர்களே?

குருவப்பன்: இது விஷமத்தனமான பொய்ப்பிரச்சாரம்! மக்களாட்சியிலே
 மக்களுக்காக சேவை செய்கிற மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்களாகக் கொடுக்கிற
சலுகையை மக்கள் விரோத சக்திகள் எதிர்ப்பது மக்களின் மன்தை நோகடிக்கும்
 செயல் என்பதை மக்கள் புரிந்து கொள்ளுவார்கள்.

சேட்டை: சுத்தமாப் புரியலே!

சுப்பாமணி: குருவப்பன், நல்லாப் பேசினீங்க! இனிமே நாம ரெண்டு பேரும்
 நகமும் சதையுமா, கண்ணும் இமையுமா, காரும் ஸ்டெப்னியுமா பிரியாம
இருப்போம். சேட்டை, பேட்டியை முடிச்சிட்டு வந்து டிக்கியைத் திறந்து விடு!
அண்ணனைக் கூட்டிக்கிட்டுப்போகணும்.

--

சேட்டைக்காரன்

Read more...

வியாழன், 20 மே, 2010

லஞ்சம் , லஞ்சம் , ஊரெல்லாம் லஞ்சம்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEVFdgUpO4TZ6kEnG54zc4G-joMZImVIocM4qoX675QB2NGsyLHYKfkyA2bV1lEUpaqlNqPWAAQaAuOSbiVMxyz-H5lWpnuccS6-Is8zvLgxnGGzfI-7tPRYgSQzAJvvtAFa0zcjlyZSyh/s320/lanjam+pen.jpghttp://2.bp.blogspot.com/_eBi5s6EFNuI/StLr_BvJOII/AAAAAAAAAQs/aQi2Pnff2U8/s320/mumbai_police_taking_bribes.jpg
http://inioru.com/wp-content/uploads/2009/09/lansam.jpghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzmNBtBi1BuFic6dis1rJRN2hrCOu3CcmHBEBOHBw7gbtoJ3JHAJoliwnbXqZMfX1W-xV5UWdUMddqDeB6p0V1kbrdImY_1Mxq2cvRtBevsS13QYr5rC_5Y6QS0hLUTF6-afR5J2iHKRCt/s400/tblkutramnews_73374575377.jpgகனவு , ஒரு நாள் நிஜமாகும் ..... என்கிற தலைப்பில் பட்டாப்பட்டி ஒரு பதிவு போட்டு அவருக்கு நம் சமுதாயத்தின் மேல் உள்ள கோபத்தை மிக காட்டமாக கூறியிருந்தார் .....

அதை பற்றி எனது கருத்து......

லஞ்சம், பெட்ரோல் விலை இவை இரண்டையும் எந்த ஒரு நாடு கட்டுக்குள் வைத்திருக்கிறதோ அது தானாகவே முன்னேறிவிடும்.

லஞ்சம் எங்கே ஆரம்பமாகிறது ? (இப்ப எல்லாம் பிறக்கும் போதே லஞ்சம் குடுத்து தான் பிறக்க வேண்டி உள்ளது , எல்லா அரசு பொது மருத்துவமனைகளிலும் லஞ்சம் குடுத்தால் தான் பிரசவம் பார்கிறார்கள் ) .

நமது தேவைகள் அவசரமாகும் போது . உதாரணமாக,
நமக்கு ஓட்டுனர் உரிமம் , கடவுச்சீட்டு ( அட தூய தமிழ், மங்கு அசத்துடா ) இவற்றை பெற இரண்டு நாள் அலைய நேரமில்லை (நாம் நேராக சென்றால் நிச்சயம் லஞ்சம் இல்லாமல் காரியம் முடியும்) , நேராக முகவர்களிடம் செல்கிறோம் , முகவர்கள் வேலை விரைவில் முடிய லஞ்சம் கொடுகிறார்கள் . அதுமட்டும் அல்லாது அரசு கேட்டுக்கும் சான்றிதல்கள் தர இயலாதவர்கள் இன்னும் அதிகமாக லஞ்சம் கொடுக்க முன் வருகிறார்கள். இப்பொழுது அரசு அதிகாரிகள் மட்டுமல்ல , மக்களும் லஞ்சம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.

எங்க ? ஏன் ? எதற்கு ? எப்படி ?
(நிறுத்து நிறுத்து , ஏன் இந்த டென்சன் கோபம் )

ஒட்டு போடத்தான் .

இருபது கோடி செலவு செய்து வெற்றிபெறும் சட்டமன்ற உறுப்பினர் ,
என்ன செய்வார் ?
????????
( ம் ம்ம்ம்ம்.... தெருவுல நாய்
குறைக்கும் போது , பக்கத்து கோயில்ல உண்ட கட்டி வாங்கி சாப்புடுவாறு)

இவற்றை சரி செய்ய என்ன வழி?

(ஒன்னியும் பன்னமுடியாது .
)

சட்டத்தை கடுமையாக்கனும்.

அது அவ்வளவு சாதாரணமாக முடியாது
, ஏன் ?

வளைகுடா நாடுகளில் சட்டம் மிக கடுமையானது , அது போன்று கடுமையாக்க நாம் நம் சமுதாயத்தை ஆணி வேரிலிருந்து சரிசெய்ய வேண்டும் , நமக்கு பிறந்ததிலிருந்து உணவு , உடை , தங்குமிடம் , பாசம் அனைத்தும் தானாகவே கிடைத்து விட்டன , வளர, வளர நாகரீகம் சொல்லிக்கொடுக்கப்பட்டு எது சரி , எது தவறு , எது குற்றம் என்பது தெளிவாக சொல்லிகொடுக்கபடுகிறது .நமக்கு இந்த கடுமையான சட்டங்கள் பொருந்தும் .

ஆனால் ?????

சென்டல் , எக்மோர் ரயில் நிலையங்கள் , குப்பை மேடுகள் போன்ற வற்றில் அனாதையாக திரியும் சிறுவர்கள் , அவர்களுக்கு உடை இல்லை, தங்குமிடம் இல்லை , பாசம் இல்லை , இருப்பது எல்லாம்........

பசி, பசி ,பசி ???


முதலில் திருட ஆரம்பிகிறார்கள் , பின்பு ரவுடியிசம் , மாமூல் , கட்டபஞ்சாயத்து ............................................ (மங்கு ரொம்ப யோசிக்காத , மூளைக்காய்ச்சல் வந்திட போகுது )

இவர்கள் செய்யும் தவறுக்கும் அந்த கடுமையான சட்டம் பொருந்துமா ???????

லஞ்சம் வாங்குவது, ஊழல் செய்வது எல்லாம் ஒருவித திருட்டு தான் , அவனுக்கும் , பசிக்காக திருடுபவனுக்கு ஒரே தண்டனை கொடுக்க இயலுமா ??????

எனவே ஆணிவேரிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது ஏன் கருத்து , உடனடியாக முடியாது மிக நீண்ட காலம் ஆகலாம் , அனால் இப்பொழுதே அந்த வேலை ஆரம்பிக்க படவேண்டும் ,

அதை யார் செய்வது ?
வேறு யார் அரசாங்கம் தான் .

எந்த அரசாங்கம் ?
தொகுதிக்கு இருபது கோடி செலவு செய்து வெற்றி பெரும் அரசு.

ஏன் இருபது கோடி செலவு செய்கிறார்கள் ? நம்ம மக்கள் லஞ்சம் கேட்பதால். (பாஸ் முன்னாடி தான் பாஸ் மக்களுக்கு லஞ்சம் கொடுத்தார்கள் , இப்ப எல்லாம் மக்களே கேட்க ஆரம்பிச்சுடாங்க )

பட்டாப்பட்டி :ங்கொய்யாலே..... பைனலா நீ என்னா சொல்ல வர்ற ?
....ம்ம்ம்..... சென்னைல நேத்து நைட்ல இருந்து நல்ல மழை

                                                                                       - மங்குனி அமைச்சர்

Read more...

அரசியல் பணியிலும் குழந்தை தொழிலாளர்கள்!!

மேற்குவங்க மாநிலத்தில் நகராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.​ இந்த தேர்தலுக்கான பிரசாரத்தின் போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் பயன்படுவதற்காக அக்கட்சியின் கொடிகளை தயார் செய்யும் பணியில் பிர்பம் மாவட்டம் போல்பூர் நகரில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுள்ள பள்ளிச் சிறுவர்கள்.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP