"இந்து என்று சொல்லாதே ராமன் பின்னே செல்லாதே " என்ற திரு துரை..சண்முகம் அவர்களின் கவிதை நூலில் இருந்து சில வரிகள் .......
அது என்ன இல்லாதது- பொல்லாதது இல்லாதது - ராமன் பாலம் பொல்லாதது - இந்துமதம்
பார்ப்பனக்கழிவாய் பார்ப்பன இந்துமதம் அதை தலையில் சுமத்தும் சாம தான் பேதம்
பணிய மறுக்கும் தலையை நோக்கி பாய்ந்து வரும் தண்டம் !
அன்று மனு நீதி இன்று உச்ச நீதி எட்டிப்பார்த்தால் பீனல் கோடுகள்... தொட்டுப் பார்த்தால் பூணூல் கோடுகள்
பல்சருக்கும் பாய் கொடுக்கும் சீதனத்துக்கும் மதம் மாறுவது - நாணயக்கேடாம் கேவலம் அல்சருக்காக மதம் மாறிய அப்பர் மட்டும் நாயன்மாராம் வரலாற்றுப்பெருமை என்ன? வயிற்று வலிக்காக மதம் மாறிய கூன் பாண்டியன் சாதனை சைவக் கொலைகள் பறந்தது சமணத் தலைகள்
குத்தகை அளிக்க முடியாமல் உழவன் குருதியில் நடுங்கிய வயல்வெளிகள்- எத்திபிழைத்த பார்ப்பனருக்கோ இனாமாக ' இறையிலிகள் ' ( வரி விலக்குபெற்ற ஊர்கள் பார்ப்பனருக்கு தானமாக அரசர்களால் கொடுக்கப்பட்டவை)
கதை கேட்டு கதை கேட்டு வரலாறை இழந்தோமே கதை கேட்டு கதை கேட்டு வர்க்கத்தை மறந்தோமே !
பத்மாசுரன் நம் உறவாளி ! நரகாசுரன் ஒரு போராளி ! பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த நம் பங்காளியை பார்ப்பனீயம் தீர்த்துக் கட்டியதே- தீபாவளி!
அடப்பாவி! "எம் தொல் குடியை அழித்தவனே " என்று இதயம் சூடாகி பார்ப்பன்நீயத் திற்கு எதிராய் படை கட்டித் திரளாமல்.. நன்றிக்கடனை காட்டாமல் காலைக்கடனும் கழிக்காமல் கொன்றவனை வணங்கி இதயம் நல்லெண்ணையில் வடை தட்டி கொலை நாளை வரவேற்கும் கேவலமே
கோபாவளி கொள்ளாமல் தீபாவளி கொண்டாடும் திராவிட அவமானம்
வரலாறு தெரியாது அசுரன் என்றால் நம்மையே அருவருப்பாய் பார்க்கின்றாய் ...
சுரா என்ற பார்ப்பன மதுவை கறாராக குடிக்க மறுத்த திராவிடப் பிரிவே அசுரா
முதலில் சாராயம் குடித்த ஜாதி பார்ப்பன ஜாதி முதலில் சாராயம் காய்ச்சிய ஜாதியும் பார்ப்பன ஜாதியே
கூட்டுக்கறி தின்பவன்தான் பார்ப்பான் என்று குழம்பவேண்டாம் யாரும் முதலில் மாட்டுக் கரிக்குழம்பு கொதித்ததும் ஆரிய பவன் தான்
புல மேயும் இளம் கன்றுக் குட்டியை நம் பல் எப்பெடி மேயவேண்டும் என்று பாடி வைத்திருக்கிறான் யாக்ஞ்சவல்கியன் அது மனுதர்மமா? இல்லை இல்லை பார்பன ருசியின் மெனு தர்மம்
அவன் சாராயம் குடித்தால் அது தீர்த்தம் நம்மா குடித்தால் நாத்தம்
இராமாயணம் மட்டுமல்ல நாமும் ஒரு முடிவுக்கு வருவோம்
ராமன் பாலம் ஒரு வாய் மொழி மோசடி இந்து என்பது ஒரு வரலாற்று மோசடி இந்து என்ற பெயரே இஸ்லாமியர் வைத்தது வெள்ளை ஏகாதிபத்தியம் அதையே மதமாக படைத்தது
இந்துக் கடவுளைப் படைத்தவன் பார்ப்பான் இந்து மதத்தை படைத்தவன் வெள்ளைக் காரன் எப்படி? இல்லை இல்லை என்பதிலிருந்து உண்டானது இந்துமதம்
யாரெல்லாம் ... கிருத்துவர் இல்லையோ ? யாரெல்லாம் ... இசுலாமியர் இல்லையோ? யாரெல்லாம் ... பார்சி இல்லையோ ? அவரெல்லாம் இந்து என்று ஆக்கியது ஆங்கிலேய அரசியல் சட்டம் .
இன்னொரு பக்கம் யாருக்கெல்லாம் இதயம் இல்லையோ யாருக்கெல்லாம் மூளை இல்லையோ அவனே இந்துவாக இருக்க முடியும் என்று அம்பேத்கரும் பெரியாரும் அறைந்து கூறினர்
உனக்கு ஒரு குவளை தண்ணீர் தந்தால்.... நீ தெருவில் நடந்தால் ... தீட்டு படும் என்று சொந்த மக்களையே ஒதுக்கி வைக்கும் இந்த மதம் ...
உனது பிறப்பையே வேசிமகன் என்று இழிவு படுத்தும்......இந்த மதம் இந்த இந்து மதம் உண் சொந்த மதமா? என்று பெரியாரும் அம்பேத்கரும் சுரணை கொடுத்த இந்த மண்ணை பார்ப்பன மல வண்டுகள் அரிக்கப் பார்க்கிறது போராடும் தலை முறையே எச்சரிக்கை
"இந்துக்களே ராமனுக்கு கோயில் கட்ட வாருங்கள் " என்று கூப்பிடும் ராம கோபாலா இங்கிருக்கும் கோயிலுக்குள் முதலில் பஞ்சமரை கூட்டிப்போடா!
ராமர் பாலத்தை பாதுகாக்க வாருங்கள் என்று ரூமர் கிளப்பும் ஏலே கணேசா தேவாரத்தமிழில் நாங்கள் தில்லையில் பாட வந்தால் தமிழ் நீச பாஷை என்று பாடவிடாமல் கபாலத்தை பிளக்கும் இனவெறி ஏனடா?
சாதியமே இந்து என்ற சரித்திரத்தை பாரடா !
நாங்கள் இந்துவாக இருந்து அனுபவிக்கும் கொடுமைகளை இருந்து நீ அனுபவிக்க அந்த ராமனோடு வாடா ! ஏ ஸ்ரீராமா சின்ன ஜாதியில் பிறந்து கவுண்டனிடம் மூத்திரம் குடிக்க சீக்கிரமாய் வாடா !
பன்றியாய் பிறந்ததனால் நீ பலமுறை தின்றிருப்பாய் இந்துவாகத் தோல் தட்டி திண்ணியத்தில் தேவர்சாதிப் பீ திங்க வாடா ! ஈடுபட்ட ராம கோபாலா எங்கேடா பி.ஜே பீ கொடியங்குளத்தில் எங்கள் இந்துக் குடலை சாதிவெறி உருவியபோது எந்த சந்துக்குள்ளே ஒளிந்திருந்தே சந்து கோபாலா ! இப்ப இந்து இந்து இந்துன்னு எங்களை ஏன் கூப்பிடுரே? உன்குடலை உருவிக்காட்டிடுவோம் ஒழுங்கைப் போடா!
மேல வளவு முருகேசு வெட்டி சாய்க்கப்பட்டபோது தட்டிக் கேட்க ஆளைக் காணோம் ... எட்டிகூடப் பார்க்காத ஏலே இல. கணேசா ! இப்ப ராமன் பாலம் காப்பாத்த உன்கூட இந்துவாக வருவதற்கு நாங்க என்ன லூசா? எங்கே இந்த இனத்துக்காக தேவர் சாதி வெறியை எதிர்த்து பேசிப்பாரு லேசா?
காத்தவராயன் ஆரியமாலா கதை இன்னும் முடியவில்லை காதல் பண்ணிய கண்ணகியையும் காதலித்த தலித் முருகேசனையும் கட்டாயமாக விஷம் வைத்துக்கொன்ற வன்னிய சாதிவெறியை கண்டிக்க எந்த முன்னணியையும் காணோம்
அந்த இந்துக்கக்களை காப்பாற்ற எந்த ராமனையும் காணோம்!
சாதியமே இந்துமதம் எதிர்த்த குரல்களுக்கோ மரண பயம் கேலிக்குரியதல்ல பார்ப்பனீயம் பயன்கரத்துக்குரியது; பயன்கரவாதத்திற்கென்று ஒரு மதம் இருக்கிறதென்றால் அது பார்ப்பன இந்து மதம் !
அடுப்பில் வருக்கப்பட்டது ஆசீவகம் சட்டியில் சுருக்கப்பட்டது சார்வாகம் கழுத்து முறிக்கப்பட்டது பவுத்தம் கழுவில் ஏற்றப்பட்டது சமணம் உயிருக்குபயந்து காட்டுக்குள் ஓடினார்கள் சித்தர்கள் நெருப்பில் பொறிக்கப்பட்டது சேரி !
சாமி கும்பிடப்போன நந்தன் சாம்பலாக வெளியே வந்தான் ! குகைக்குள் போன பழனி போகர் திரும்பவே இல்லை ! வரலாற்றில் ஒரு பார்ப்பான் கூட ஜோதியில் கலந்ததே இல்லை !? பார்ப்பன படுகொலையில் பயந்து ஓடின ஆறுகள்... நடுங்கி அலறின காடுகள்.... பீதியில் இரைந்தன கடல்கள்... உதிரத தெரிப்பில் ஒடுங்கின மலைகள் ...... என்னகொடூரம்! பார்ப்பனக் கவுச்சியில் மூச்சு திணறிய காற்றும் சொல்லும் வர்ணாசிரம ரத்த வாடையை....
பார்ப்பான் தவறு செய்தால் மயிரே போயிற்று சூத்திரன் தவறு செய்தால் உயிரே போயிற்று
திரு ஞானசம்மந்தனுக்கு ஞானப்பால் ........ தீண்டத்தகாதவனுக்கு சாணிப்பால்....... இதுதான் இந்துமதம்
தலை விதி என்று எங்கள் உணர்வுககளை ஒடுக்கியது பார்ப்பன்நீயம் தாய் முலைக்கும் வரி போட்டு எங்கள் உறுப்புகளையும் ஒடுக்கியது சாதீயம் ! இதுதான் இந்துமதம் !
எங்கே பொதுவாய் இந்துமதம்? சாதியிலும் சேர்த்தியில்லை சாமியிலும் சேர்த்தியில்லை ! கல்லாய் சமைந்த நிலையிலும் உழைக்கும் மக்கள் சாமி வேட்டையாட வேல் கம்போடு ஒரு உழைப்பில் இருக்குது !
உழைக்காத மேல் சாதி சாமியோ சம்மணம் போட்டும் படுத்துக் கொ ண்டும் அம்மண சிலைகள் சூழ ஆறுவேளை திங்குது...........
கறியும் எலும்பும் கள்ளும் சுருட்டும் எங்களைப்போலவே எங்கள் சாமி கேட்குது ! ஒரு தவறு செய்தது போல் ஊருக்கு வெளியே.......ஒதுங்கி இருக்குது !
நெய்யும் பொங்கலும் பொய்யும் களவும் கொண்ட பார்பனச்சாமியோ பக்கத்தில் இரண்டு பொண்டாட்டி கேக்குது ! இருந்தும் வெக்கமே இல்லாமல் ஊருக்குள் இருந்துகொண்டு ஒரு கூத்தியாளும் தேடுது ! நம்மை போலவே....நம்ப சாமி கஞ்சோ கூழோ காய்ச்சிக் குடிக்குது ஆதிக்கச சாதி - சாமி வாழை இல்லை பொட்டு வடை பாயாசம் கேட்குது !
இது சாமித்திமிரா? சாதித் திமிரா? நம்ம மேல சாமி வந்தா நாக்குல கம்பிய குத்துது ! பார்ப்பான் சாமி மேலவந்தா பொய் அடுத்தவன வெட்டுது !
எனவேதான் சொல்கிறோம் பக்தி என்ற பெயராலே பார்ப்பான் பின்னே செல்லாதே ! இந்து என்ற நினைப்பிலே ராமன் பின்னே செல்லாதே ! எப்போதெல்லாம் நாம் இழிவு படுத்தப்படுகிரோமோ அப்போதெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறது எப்போதெல்லாம் காவுகொடுக்கப் படுகிறோமோ அப்போதெல்லாம் ராமனின் நடமாட்டம் தெரிகிறது காட் ஒப்பந்தம் நாட்டை காவு கொண்ட நேரத்தில் ராம ஜென்ம அர்ச்சனை இன்று அணுசக்தி ஒப்பந்தம் நாட்டை அடிமையாக்கும் வேளையில் ராமன் பால பிரச்சினை அணுசக்தி ஒப்பந்தமோ நாட்டை மறு காலநியாக்குது மனுசக்தி ஒப்பந்தமோ நாட்டை மீண்டும் மனுதர்மமாக்குது இரு முனையில் போராட காலம் கடமையை நாம் மேல் சுமத்துது
காரியம் நடக்க ராமன் கதை விட்ட ஆரியம் இப்போது தோரியம் கெட்டுவிடும் தோண்டாதே என்கிறது தோரியம் இல்லை - அங்கே ஆரியம் கெடுகிறது என்று ஆர் .எஸ். எஸ் அடிவயிறு எரிகிறது
எய்ட்ஸ் ஆர் .எஸ். எஸ் இரண்டும் ஆபத்து உள்ளுக்குள் விட்டால் உயிரின் எதிர்ப்பு குறைந்துவிடும் உள்ளே விட்டதனால் இதோ உருக்குலைந்து தமிழ் நாடு பிராணவாயுவை சுவாசித்து ஆரியமில வாயுவை அடிவாயில் போற்றி மேலவையில் அபே-ஓம் விட்டு பார்ப்பன மலத்தை இதயத்தில் பிசையும் தமிழகமே
நாம் நதிக்கரை எங்கும் பார்ப்பனப் பாசி நாம் ரத்தமெல்லாம் பார்ப்பன சீழ் பனி கடுமையானது ஆற்றையே அடித்து துவைக்க வேண்டும் நாம்- ஏறத்தத்தையே கழுவித் துடைக்க வேண்டும் நாம்!
அந்தப்பக்கம் போனால் ஆளைப் பிடித்திழுக்கும் - அமிர்தானந்தமயி தப்பித்து வெளியே வந்தால் எத்திக்கும் பிரம்ம குமாரிகள் வாழ்நிலைப போராட்டங்களை திசை திருப்பும் ஆழ் நிலை தியானங்கள்... வர்கப் போராட்டத்தை திசை திருப்பும் வாழும் கலை வல்லுனர்கள்... வர்க்கக் கோபத்தை அடக்கும் பேலும் கலை பிராணாயாமங்கள் இத்தனைக்கும் மத்தியில் அதிகாரத்தை பிடிக்க எத்தனிக்கும் ராமன்
இப்போது நடப்பது அரசியல் ராமாயணம் இதில்- சீதைக்கு ஜெயலலிதா சக்களத்தி அனுமாருக்கு சூ அண்ணன் முறை சுக்ரீவனுக்கு விஜயகாந்த் சொந்தத் தம்பி விபீடனுக்கோ வை. கோ உடன் பிறப்பு! இப்போது வருபவன் தசரதனுக்கு பிறந்த ராமனல்ல இவன் தாராளமயம் -தனியார்மயத்துக்குப் பிறந்த ராமன்
அன்றைக்கு அந்நிய ராமன் எங்கிருந்தோ வந்து இங்குள்ள சுக்ரீவன் விபீடணனை வைத்து பொண்டாட்டிக்குப பாலம் கட்டியது போல.... இன்றைக்கு அந்நிய அமெரிக்க ராமன் இங்குள்ள ஒட்டுக் கட்சி விபீடனர்களை வைத்து மன்மோகன் அனுமாரை வைத்து... பாலம் கட்டுவதும் தங்க நாற்கரச் சாலை அமைப்பதும்.. தட்டிக் கேட்கும் தொழிலாளர்களை கழுத்தை வெட்டுவதும்... தொழிற்சங்க உரிமைகளின் மூக்கை அறுப்பதும் தொடர்கிறது..
ஆக்கிரமித்த ராமனைப் போல நமது விவசாயத்திற்குள்ளே நுழைந்து விவசாயிகளை அழிக்கிறான்; தொழில் துறையில் நுழைந்து தொழிலாளர்களை விரட்டுகிறான்
உழைத்து வாழும் மக்களை உழைத்து வாழ வேலையின்றி உண்ணச் சோறின்றி ஒதுங்க இடமுமின்றி- உலக மய காண்டீபத்தால் கொலை செய்யும் அந்நிய அமெரிக்க ராமன்களோடு இந்த அயோத்தி ராமனையும் சேர்த்து முடிப்போம்!
இனியும் தொடரக்கூடாது இந்த இழிவுகளின் ராமாயணம்... நரகாசுரனால்.... பத்மாசுரனால்.... ராவணனால்...முடியாததை நக்சல்பாரிகள் முடித்துவைப்பார்கள்... சமூகவிதிப்படி சாதித்தே தீரும் பாட்டாளி வர்கத்தின் அசுரபலம் இந்த ராமாயணத்தை முடித்து வைக்கும்! ..
|
Send free SMS to your Friends on Mobile from your Yahoo! Messenger. Download Now! http://messenger.yahoo.com/download.php
0 கருத்துகள்:
கருத்துரையிடுக