புதன், 22 டிசம்பர், 2010

ஆர்.எஸ்.எஸ்ஸினால் இந்த தேசம் அடைந்த பலன் என்ன?


ராஷ்ட்ரீய சுயம் சேவக் என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் உருவாகி 85 ஆண்டுகள் நிறைவுறுகிறது. 3 முறை தேசிய அளவில் தடைச் செய்யப்பட்ட இவ்வமைப்பின் அஸ்திவாரமே வெறுப்பின் மீதுதான் போடப்பட்டது.

இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினியின் பாசிசம் என்ற விஷத்தை பருகி விருட்சமாக வளர்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் இந்த நாட்டிற்கு என்ன தொண்டை ஆற்றியது என்பதைவிட இந்த தேசத்திற்கு செய்த, செய்துக்கொண்டிருக்கும் அநீதங்கள் என்ன? என்பதுக் குறித்துதான் பேசவேண்டியுள்ளது.

சுதந்திரத்திற்கு முன்னரே துவங்கிய இவ்வியக்கம் சொந்த மண்ணிலிருந்து அந்நியர்களை விரட்டியடிக்க ஆயுதம் தாங்கிய போர் என்ன, அகிம்சை வழியில் கூட போராடாத கேடுகெட்ட கொள்கையை சொந்தமாக்கிக் கொண்டதாகும்.

வர்ணாசிரமும், சிறுபான்மை எதிர்ப்பிலும் தங்களை வளர்த்துக் கொண்ட இந்த கும்பல் தொடர்ந்து தேச பக்த வேடம் புனைந்து நாடகமாடி வந்தது. ஆனால், இவர்கள் இந்தியாவின் தேசிய கொடியை கூட அண்மைக்காலம் வரை அங்கீகரிக்காதவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம்தான்.

சின்னஞ்சிறுசுகள் முதல் வயதானோர் வரை என சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் தனித்தனி இயக்கம் உருவாக்கி குடும்ப இயக்கமாக மாறியுள்ள ஆர்.எஸ்.எஸ் வெறுப்பை விதைத்து தேசத்தை அழிவுப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றுக்கொண்டிருக்கிறது.

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வேளையில் அப்போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை ஆங்கிலேயனிடம் காட்டிக் கொடுத்தது, இந்தியாவின் தேசத்தந்தை எனப் போ்ற்றப்படும் மகாத்மா காந்திஜியை கொலைச் செய்தது, வரலாற்றுச் சின்னமான பாப்ரி மஸ்ஜிதை இடித்துத் தள்ளியது, சிறுபான்மை முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் ஆயிரக்கணக்கான கலவரங்கள் வாயிலாகவும், இன அழித்தொழிப்பின் மூலமும் கொடூரமாக கொலைச்செய்தது, தங்களின் கேடுகெட்ட லட்சியம் நிறைவேற சொந்த சமுதாய மக்களையே காவுக் கொடுக்க துணிவது, மக்கள் நடமாடும் பகுதிகளிலும், வணக்கஸ்தலங்களிலும், மக்கள் பயணிக்கும் ரெயிலிலும் குண்டுவைத்து கொன்றது என தொடர்கிறது ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் தேசப்பணி.

இந்நிலையில் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஹேமந்த் கர்காரே என்ற நேர்மையான அதிகாரியால் வெளிக்கொணரப்பட்ட ஹிந்துத்துவாவின் உண்மை முகம் தொடர்ந்து அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு என ஆர்.எஸ்.எஸ்ஸின் சாயம் மீண்டும் ஒரு முறை வெளுத்துக்கொண்டிருக்கும் வேளையில்தான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி அமெரிக்க தூதர் திமோத்தியிடம் லஷ்கரைவிட ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாதம் கொடூரமானது என்றுக் கூறிய தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

ராகுல் மட்டுமல்ல, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணனும் எஃப்.பி.ஐயின் உயர் அதிகாரியிடம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் கொடூர முகத்தைக் குறித்து பேசியுள்ளார் என்ற செய்தியை அதே விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இத்தகவல்கள் வெளியானவுடன் ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் முகமூடியான பா.ஜ.க சகட்டு மேனிக்கு அறிக்கைகளை விடுகிறது. திக்விஜய்சிங் கூறியதுபோல் எல்லா ஹிந்துக்களும் தீவிரவாதிகளல்ல! ஆனால் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்களான ஹிந்துக்களெல்லாம் ஆர்.எஸ்.எஸ் காரர்களே என்பது உள்ளங்கை நெல்லிக்கனியைப் போல் உண்மைதானே!

இந்தியாவிற்கு நாசத்தை தவிர வேறு எதனையும் தங்கள் உள்ளத்தில் கற்பனைக்கூட செய்யாத இந்த பாசிச இயக்கம் இந்த தேசத்திற்கு தேவையா? தாங்கள் விடுக்கும் அறிக்கைகளும், மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானமும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சி இந்த தேசவிரோத இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? தொடர்ந்து இந்த விஷ விருட்சத்தையும் அதன் கிளைகளையும் வளரவிடுவது எதிர்கால இந்திய தேசத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகவே அமையும்.

ஆகவே உடனடியாக இவ்வியக்கத்தை தடைச் செய்வதோடு இவர்களுக்கும் அந்நிய நாட்டு உளவுத்துறைகளுக்குமிடையேயான உறவை பகிரங்கப்படுத்தி, இந்த பயங்கரவாதிகளை சிறையில் தள்ளவேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு உள்ளார்ந்த நேர்மை ஒன்று இருக்குமானால் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளட்டும்!

                                                                             விமர்சகன் - பாலைவனத் தூது

Read more...

புதன், 25 ஆகஸ்ட், 2010

கூட்டணிக்கு வெடியா...?

 

 29.08.10    கவர் ஸ்டோரி

கூட்டணியைப் பற்ற¤ குறை கூறி குத்திக் குடைகிற வேலை எல்லாம் வேண்டாம்’’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தடையுத்தரவே பிறப்பித்திருந்தாலும்  அதைப் பற்றியெல்லாம் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. தங்குதடையின்றி அவரது தாக்குதலைத்  தொடர்ந்து வருகிறார்.

கடந்த 20-ம் தேதி, ‘‘சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பெயரைச் சூட்ட வேண்டும்’’என்று கோரி, காங்கிரஸ் ‘நட் பகம்’ சார்பில்  உண்ணாவிரதம் நடந்தது. கவிஞர் ஜோதி ராமலிங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். அங்கே  அவருடைய பேச்சு தி.மு.க.-காங்கிரஸ் இரு தரப்பிலும் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டிருக்கிறது. இனி இளங்கோவன்  பேசிய பேச்சில் சென்சார் செய்யப்படாத சில  பகுதிகள் இதோ.

‘‘காங்கிரஸில் பொறுப்பில் இருக்கும் சிலர் ராஜிவ் பிறந்தநாளில் ஜவ்வு மிட்டாய் கொடுத்து விட்டு, ‘விழாவைக் கொண்டாடி விட்டோம்’ என்று பேப்பருக்கும்,டெல்லிக்கும் அறிக்கை சமர்ப்பித்து விட்டு இருந்து விடுகிறார்கள். ஆனால், ராஜிவ் காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடும்போது சில உருப்படியான காரியங்களைச் செய்ய வேண்டும்  என்று நினைக்கிறவன் நான்.

இங்கே அரசு பொதுமருத்துவமனைக்கு ராஜிவ் பெயரைச் சூட்ட வேண்டும் என்று நாங்கள் சொல்வது ராஜிவுக்குப் புகழ்சேர்க்க வேண்டும் என்பதற்காக அல்ல.அவரது பெயரைச் சூட்டுவதன் மூலம் நீங்கள் புகழைச் சேர்த்துக்கொள்ளுங்கள் என்பதற்காகத்தான்.

‘உண்ணாவிரதம்’ என்று சொல்லிவிட்டு பல பேர் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே கூவம் அருகே உண்ணாவிரதம் நடத்த இடம் கொடுத்தால் கண் டிப்பாக அங்கே சாப்பிட முடியாது’ என்பதால்தான் நமக்கு இங்கே இடம் கொடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.இப்படி பல கில்லாடித்தனங்களைச் செய்யக்கூடிய அரசு  இது. ஊழலைச் செய்தாலும் அதை விஞ்ஞான ரீதியாக செய்யக்கூடிய அரசாங்கம் இது.  மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில் நுணுக்கமாக பலப்பல காரியங்களைச் செய்வதில் இவர்கள் வல்லவர்கள். இப்போது இவர்கள்தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

ராஜிவ் காந்தியின் பெயரை அரசு பொது மருத்துவமனைக்கு சூட்டுவதில் அரசுக்கு என்ன பிரச்னை இருக்கின்றது என்று எனக்குத் தெரியவில்லை. இத்தனைக்கும் நம்முடைய தயவில்தான் இவர்கள் இங்கே ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.நாம் இல்லையென்றால் முதல்வரும் கிடையாது, துணை முதல்வரும் கிடையாது. மத்தியில்  இருக்கின்ற ஒருவர் மிச்சமாக இருப்பார்.அவரும் வேண்டாம் என்றால்,அவரும் இருக்க முடியாது.

நாங்கள் என்ன கேட்கின்றோம்? அடித்த கொள்ளையில் பங்கு கேட்கிறோமா? இல்லை பதவிகளில் பங்கு கேட்கிறோமா? எங்கள் தலைவர் ராஜிவ் காந்தியின் பெயரை  அரசு பொது மருத்துவமனைக்கு வையுங்கள் என்றுதானே கேட்கிறோம்?
ராஜிவ்காந்தியின் பெயரை ஜி.எச்சிற்கு வைக்கச் சொன்னால்,அதற்கு மழுப்பலும், வழுப்பலும்தான் பதில் என்று சொன்னால் என்ன நியாயம்? மிகத் தெளிவாகச் சொன் னால் ‘கோபம் வருகின்றது. வலி, வலி’ என்று சொல்கிறார்.இப்படியே பண்ணிக் கொண்டிருந்தால் வலிக்காமல் என்ன செய்யும்?

நல்ல காரியங்களை செய்யச் சொன்னால் ஏன் கோபம் வருகிறது? உடனே டெல்லிக்கு கோள் மூட்டுவதற்கு ஓர் ஆணையும், பெண்ணையும் அனுப்பி விடுகிறார்கள். வாரம் தவறினாலும் என் மீது கோள் சொல்ல ஆள் அனுப்புவது தவறுவதே கிடையாது. எனக்கு அதைப்பற்றி கவலையில்லை. நான் மந்திரியாகவும் இருந்தவன், சாதாரண  தொண்டனாகவும் இருந்தவன்.

ஏதோ காங்கிரஸில் பவுடர் போட்ட இரண்டு,மூன்று அரசியல்வாதிகளை நீங்கள் பணக்காரர்களாக ஆக்கிவிட்ட காரணத்தால் காங்கிரஸ்காரர்கள் எல்லாம் உங்களுக்கு அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மன்னிக்க வேண்டும்.காங்கிரஸ்காரர்களைப் பற்றி தவறாக எடை போடாதீர்கள். 

நீங்கள் வளர்த்துவிட்ட 2பேரில் ஒருவரை இயற்கை அழைத்துக் கொண்டு விட்டது.இன்னொருவர் கொஞ்சம் பவுடர் எல்லாம் அதிகமாக போட்டுக்கொண்டு இருக்கிறார். ஒரு பவுடர் போட்ட மனிதர் மட்டுமே காங்கிரஸ் என்பது கிடையாது.காங்கிரஸ் என்பது மக்களோடு மக்களாக இருக்கின்ற மக்கள் சக்தி என்பதை நீங்கள் புரிந்துகொள்ள  வேண்டும்.

எல்லா இடத்திலேயும் ஒரு திருஷ்டி பரிகாரம் இருப்பதுபோல் காங்கிரஸ் கட்சியிலும் ஒன்றிரண்டு திருஷ்டி பரிகாரங்கள் இருக்கலாம்.அதுதான் காங்கிரஸ் என்று எடுத் துக்கொண்டால் பாவம் ஏமாறப் போவது நீங்கள்தான். உங்களைக் கண்டிக்க வேண்டும், திட்ட வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எனக்குக் கிடையாது.முடிந்தால்  உங்களை திருத்திப் பார்க்கலாம் என்பதுதான் எனது நப்பாசை. அது முடியாது என்றுதான் நினைக்கிறேன். என்ன செய்வது? சிலவற்றின் வாலை நிமிர்த்தவே முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.

ராஜிவ் காந்தியின் பெயரை வைப்பதில் உங்களுக்கு என்ன நஷ்டம் என்று எனக்குத் தெரியவில்லை? வேண்டுமென்றால் கவிஞர் ஜோதி ராமலிங்கத்தை நீங்கள் கலந்து கொள்கிற விழாவிற்கு வரச் சொல்லி உங்களை வாழ்த்தி கவிதை பாட வேண்டும் என்றால் பாடச் சொல்கின்றேன். அதற்குப் பிறகாவது வைப்பீர்களா? இல்லை, ஊரெல் லாம் உங்களுக்கு டிஜிட்டல் பேனர் வைக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கும் நாங்கள் தயார்.உலகத்திலேயே உங்கள் குடும்பம்தான் முதல் குடும்பம் என்று  சொல்லச் சொன்னால் கூட அதையும் நாங்கள் செய்யத் தயார்.அப்போதாவது ராஜிவ் பெயரை வைப்பீர்களா?

‘நாடாள வந்தவனே, நீ இந்த நாட்டை ஆள வேண்டும். இந்த நாட்டு மக்கள் உனக்கு அடிமை’ என்று எழுதிக் கொடுக்கச் சொல்கிறீர்களா? கூவம் நதியிலேயே எழுதிக்  கொடுத்து விடுகின்றோம். (பலத்த சிரிப்பு)

தீவிரவாதத்துக்காக உயிர்விட்ட ஒரு மகானின் பெயரை அரசு பொது மருத்துவமனைக்கு வையுங்கள் என்று சொன்னால்,அதற்கு நீங்கள் முடியாது என்று சொன்னால்  என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியவில்லை.

அப்படித்தான் ராதாபுரத்திலே நீங்கள் ஒரு பெரியவர், அம்மையார் சிலையை வைத்தீர்கள். அதை நாங்கள் ஆட்சேபணை செய்யவில்லை. உள்ளூர்க்காரர்கள் செய்தார்கள்.  அதுவேறு விஷயம். அந்த ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரை வைக்கவே எவ்வளவு போராட வேண்டி யிருந்தது?

92-வயதான சுடலைமுத்து நாடார் என்ற தியாகி, சாகும்வரை அதற்காக உண்ணாவிரதம் இருந்தார்.அவரைப் பிடித்து நீங்கள் ஜெயிலில் அடைத்தீர்கள். அங்கும் அவர் உண்ணாவிரதம் இருந்ததால் அவரது உயிருக்கு ஆபத்து என்ற நிலை வந்தபிறகுதானே காமராஜர் பெயரை வைக்க நீங்கள் முடிவு செய்தீர்கள்? 

பெயர் வைப்பதில்தான் நீங்கள் மன்னராயிற்றே?  பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு சின்ன பாலம் கட்டினால்,பதினைந்தாயிரம் ரூபாய்க்கு பெரிய போர்டு வைப்பீர்களே! காங்கிரஸ்காரர்கள் அப்படி செய்யாததால்தான் 67-ல் தோற்றோம். இப்போதும் கூட மத்திய அரசாங்கம் கொண்டுவரும்  நல்ல திட்டங்களைக்கூட நாங்கள் சொல்வதில்லையே.

இப்போதுதான் அது எங்கள் புத்தியிலே உறைத்து குமரியில் இருந்து தொடங்கி தமிழகம் முழுவதும் மத்திய அரசின் சாதனையை எடுத்துச் சொல்ல யாத்திரை வந்து  கொண்டிருக்கிறோம்.

அருமைத் தலைவி சோனியாகாந்தி பாராளு மன்றத்தின் நமது எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசும் போது, ‘பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற நீங்கள் மத்திய அரசு  மக்களுக்காகப் போடுகின்ற நல்ல திட்டங்களை மக்களிடையே எடுத்துச் சொல்ல வேண்டும்’ என்று சொல்லி கூடவே, ‘சில மாநிலங்கள் மத்திய அரசின் திட்டங்களை தங்களுடைய திட்டங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்’என்றும்சொல்லியிருக்கிறார்.சோனியா பெருந்தன்மை யானவர், பரந்த உள்ளத்துக்குச் சொந்தக்காரர் என்பதால்  பெயர் சொல்லாமல் ‘சில மாநிலங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால்,நான் கொஞ்சம் வேறுபட்டவன்.அதுவும் கூவத்தின் அருகில் நிற்பதால் சொல்கின்றேன். மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் தங்களுடைய திட்டம் என்று  சொல்வது தமிழக அரசுதான். ‘108’ என்ற ஆம்புலன்ஸ் திட்டம் என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம்.இந்தத் திட்டம் தமிழக அரசின் திட்டமாக இருந்தால் ஆம்புலன்ஸின் ஒரு பக்கம் முதல்வர் படமும், மறு பக்கம் துணை முதல்வர் படமும் இருக்குமா, இல்லையா? அவர்கள் படம் இல்லை என்பதில் இருந்தே இது மத்திய  அரசின் திட்டம் என்று தெரிகிறதல்லவா? இது போன்ற பில்டப்கள் எதற்கு?

எப்போதுமே அடுத்தவர் வீட்டில் இருப்பதுதான் பலருக்கு விருப்பம். சொந்த வீட்டில் இருப்பது அவர்களுக்கு... (கைதட்டல்) நான் சொல்வதை நீங்கள் தப்பாக எடுத்துக்  கொள்ளக் கூடாது. சிந்திக்க வேண்டும்.

இன்றைக்கு காங்கிரஸ்காரர்கள் உஷாராக இருக்கின்றார்களோ இல்லையோ மக்கள் உஷாராக இருக்கிறார்கள்.நாட்டு மக்கள் பயன் பெறுகிறார்களா? அல்லது ஒரு குடும்பம் பயன் பெறுகின்றதா?என்பது போன்ற எல்லா விஷயங்களும் மக்களுக்குத் தெரிகிறது.67-க்குப் பிறகு நாம் ஆட்சியில் இல்லை. இன்னும் எவ்வளவு ஆண்டுகள்  வேண்டுமானாலும் நம்மால் காத்திருக்க முடியும்.காரணம் பதவி என்பது நமக்கு உணவு போன்றது கிடையாது.ஆனால் மற்றவர்களுக்கு அப்படி முடியாது.பதவி இல் லையென்றால் அவர்களால் இருக்க முடியாது.நம்மைப் பொருத்தவரை பதவி இல்லையென்று சொன்னாலும்,சாலைகளில் கதர் சொக்காயை போட்டுக்கொண்டு காலரை தூக்கிவிட்டு பெருமையாக நடக்க முடியும். ஆனால் அவர்களால் அப்படி நடக்க முடியாது.

அந்தக் காலத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் தோளில் துண்டை  போட்டுக் கொண்டு ரோட்டில் நடந்தால் ரோடே சுத்தமாகி விடும்... காரணம், அந்த அவ்வளவு  பெரிய துண்டு போட்டுக் கொண்டு நடப்பார்கள். அவசர கால நிலை வந்தபோது அந்தத் துண்டுகள்,கரை வேட்டிகள் எல்லாம் எப்படி காணாமல் போயின என்று  தெரியும்.

‘என்னுடைய தாத்தா, அப்பா காங்கிரஸ்காரர்கள். நான் பேச்சு கேட்பதற்காக அந்தப் பக்கம் போனேன். நான் மீண்டும் என் அப்பா வழிக்கு வந்துவிட்டேன். தயவுசெய்து  என்னை உள்ளே போடாதீர்கள்’ என்று சொன்னவர்கள்தானே இவர்கள்?இன்றைக்கு வீர தீரமாக,வீரத்தில் இவருக்கு ஈடு இணை யாருமில்லை என்பதுமாதிரி இவர்  பேசுகிறார்.

நான் என்ன தகராறு செய்தேன்?காமராஜர் பெயரை ராதாபுரம் பஸ் ஸ்டாண்டிற்கு வைக்க வேண்டும் என்று அங்கிருந்த மக்கள் எல்லாம் விரும்புகிறார்களே,அதைச் செய்யுங்கள் என்று சொன்னதற்கு வம்பு ஆரம்பித்தது.பின்பு மத்திய அரசின் திட்டங்களை தங்களுடைய திட்டம் என்று கூறிக்கொள்ளாதீர்கள் என்று சொன்னபோது கொஞ்சம் அதிகமாகிவிட்டது. பிறகு உங்களுக்கே தெரியும் எதனால் முற்றியது என்று.அதன்பின்பு, ராஜிவ்காந்தி,ராகுல் காந்தி பற்றி தனிப்பட்ட முறையில் கேவலமாகப்  பேசினால் தாங்கிக்கொள்ள முடியுமா? அந்தக் குடும்பம் என்ன சாதாரண குடும்பமா?அந்தக் காலத்தில் மோதிலால் காலத்தில் இருந்து அந்த குடும்பத்தை எடுத்துக்  கொள்ளுங்கள். இந்தியாவிலே பணக்காரர்களில் ஒருவராக இருந்தவர் மோதிலால்.மாளிகை போன்ற தனது சொந்த வீட்டையே நாட்டுக்காக எழுதி வைத்தார். நீங்கள்  நினைப்பது போல் ஏதோ ராயப்பேட்டாவிலே ஒரு கோயிலுக்கு முன்னால் இருக்கின்ற ஒன்றரை கிரவுண்ட் வீடு கிடையாது. அது கிட்டத்தட்ட நூறு ஏக்கர் மேல் இருக்கின்ற ‘ஆனந்தபவன்’ என்ற பெயரில் இருந்தது.

இன்றைக்கு நான் பேசுவது உடனுக்குடன் ஒரு பெரிய மனிதருக்குப் போய்ச் சேருகின்றது. கேட்க முடிகின்றது. பார்க்க முடிகின்றது என்றால் அதற்கு அஸ்திவாரம்  போட்டது ராஜிவ் காந்தி தான். அவருக்கு என்ன பரிசு தந்தோம். நாட்டை பொருளாதாரத்தில் உயர்த்திய அந்த பெண்சிங்கம் இந்திராகாந்திக்கு இந்த நாடு என்ன பரிசு தந்தது?அவர்களின் உயிரை அல்லவா பறித்துக்கொண்டோம்.நாட்டுக்காக உயிர்நீத்த அவர்களின் வாரிசுகள் இன்றைக்கும் அவர்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல், நாட்டுக்காக உழைக்கின்றோம் என்று வந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் எவ்வளவு உத்தமமான குடும்பம் என்பதை இருக்கின்ற சில சில்லறைகள் பார்த்து  கற்றுக்கொள்ளவேண்டும்.

நாட்டுக்காக உயிர்நீத்த ராஜிவ்காந்தியின் பெயரை அரசு பொதுமருத்துவமனைக்கு வைக்க வேண்டும் என்று சொன்னால் எத்தனையோ போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.காந்தியவழியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், நமக்கு சுபாஷ்சந்திர போஸின் வழியும் தெரியும்.

நான் சில விஷயங்களைச் சொன்னால் உங்களுக்கு வலி எடுக்கின்றது. உங்களுக்கு வலி எடுக்கக் கூடாது நிரந்தரமாக ஒரு நிவாரணம் வேண்டும் என்பதற்காகத்தான் சில விஷயங்களை நான் சொல்கிறேன்.நீங்கள் அப்போதுக்கப்போது,அமிர்தாஞ்சன் தடவினால் சரியாகிவிடும் என்று நினைக்கிறீர்கள்.

‘சொந்தக் கட்சிக்காரர்களுக்கே ஒன்றும் செய்யாத அவர்கள் நமக்கு எப்படிச் செய்வார்கள்?’ என்று சிலர் கேட்கிறார்கள். உண்மைதான். அண்ணாவின் நூற்றாண்டு விழாவையே சும்மா ஒப்புக்குக் கொண்டாடியவர்கள்தானே இவர்கள்? ‘தன்னை வளர்த்த, இந்தப் பதவியை அடைவதற்கு உதவியாக, ஏணியாக இருந்த தலைவரின் நூற்றாண்டு விழாவையே சிறப்பாகக் கொண்டாடாதவர்கள்,உங்கள் தலைவரின் பெயரை ஜி.எச்சிற்கு எப்படி வைப்பார்கள்?’ என்று விஷயம் தெரிந்த காங்கிரஸ்காரர்கள்  சொல்கிறார்கள். நான் சொல்லவில்லை.

(இளங்கோவன் கைக்கு ஒரு துண்டுச் சீட்டு வருகிறது அதைப் படித்துவிட்டு) சிவாஜிக்கு இன்னும் மணிமண்டபம் கட்டவில்லை.சிவாஜிக்கு மணி மண்டபம் கட்ட இந்த  அரசிடம் பணமில்லையா? பணம் இல்லை என்று சொன்னால் நாங்கள் நன்கொடை வசூலித்துத் தருகிறோம். சென்னையையே வளைத்து வளைத்து விலை பேசுகின் றவர்களுக்கு இது ஒரு பெரிய காரியமா?

இப்போது கூட்டணி இருக்கிறது. இன்று மாலை வரை எந்த மாற்றம் இல்லை என்பதை நானும் ஒப்புக்கொள்கின்றேன். ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது  என்று நான் எப்படிச் சொல்ல முடியும்? எங்களைப் பொருத்தவரையில் அம்மையார் (நான் அம்மையார் என்று குறிப்பிட்டது சோனியா காந்தியை) என்ன சொன்னாலும்  கேட்போம், தேர்தலின்போது இவர்களோடுதான் கூட்டணி,அல்லது காங்கிரஸ் தலைமையில் இவர்களோடுதான் கூட்டணி என்று அம்மையார் சொன்னாலும் அதனையும்  நாங்கள் கேட்போம். எங்களுடைய கருத்துக்கள் ஏற்கெனவே மேலிடத்தில் சொல்லப்பட்டுவிட்டது.

 தமிழக மக்களுக்கு எது நல்லதோ எந்தவிதமான கூட்டணி அமைந்தால் தமிழக மக்களுக்கு நல்லது என்று மேலிடம் நினைக்கின்றார்களோ அதனை காங்கிரஸ் தொண் டர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

‘ஜி.எச்சிற்கு ராஜிவ்காந்தியின்  பெயரை நீங்கள் வைக்கவில்லையென்றால், நாங்கள் வந்து வைக்கப் போகிறோம்’ என்று இங்கே குறிப்பிட்டார்கள். அது நடக்கப்போகிறது’’  என முடித்துக்கொண்டார் இளங்கோவன்.



இளங்கோவனின் இந்தப் பேச்சுக்கு அன்று மாலையே சேலத்தில் நடந்த விழாவில் பதிலளிப்பதுபோல பேசியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. ‘‘மத்திய அரசின் நிதி, மாநில  அரசின் நிதி என்றெல்லாம் இல்லை. எல்லாம் ஒரே கரன்ஸிதான். மத்திய அரசு எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தாலும் அதுபற்றி மாநில அரசின் கருத்தைக் கேட்க வேண்டும்.அது நுழைவுத் தேர்வோ அல்லது வரி விதிப்போ எதுவாக இருந்தாலும் சரி.ஆட்சியைப் பற்றி கவலையில்லை’’ என்று பேசியிருக்கிறார் கலைஞர்.

இதற்கிடையே சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அ.தி.மு.க.வினர் இல்லத் திருமணங்களை நடத்தி  வைத்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ‘‘அ.தி.மு.க.வின்  வெற்றிக்கான கவுன்ட் டவுன் ஆரம்பித்து விட்டது’’ என்று பேசி, அதிரடியைக் கிளப்பியிருக்கிறார். மற்றொருபுறம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்,‘‘தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம்!’’ என்று சொல்லி பீதியைக் கிளப்பியிருக்கிறார்.

இளங்கோவன் பேச்சைத் தொடர்ந்து ஜெ., விஜயகாந்த் ஆகியோரது பேச்சை கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஏதோ நடக்கப் போகிறதென அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடு கின்றன.காரணம்,இந்த காரசாரப் பேச்சுக்கு ஒருவாரம் முன்பு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவைச் சந்தித்து உரையாடியிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது!        
          
                                                                                       இரா.முருகேசன் - குமுதம்

Read more...

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

பாதுகாப்புக்கே பாதுகாப்பு....

அது என்ன ரவுடிக்கே ரவுடி, கில்லாடிக்கு கில்லாடி போல, பாதுகாப்புக்கே பாதுகாப்பு ? இருங்கள் விளக்கமாக சொல்லுகிறேன். ஒரு நபருக்கு சில நபர்கள் பாதுகாப்புத் தருகிறார்கள். அந்த சில நபருக்கு அந்த ஒரு நபர் பாதுகாப்புக் கொடுத்தால் ? குழப்பமாக இருக்கிறதா. விளக்கமாகச் சொல்லுகிறேன்.

ஒரு மன்னருக்கு மூன்று பேர் பாதுகாப்புத் தருகிறார்கள். அந்த மூன்று பேருக்கும், மூன்று பொற்கிழிகளைக் கொடுத்து, அந்த மன்னர் அவர்களின் வாழ்வுக்கு பாதுகாப்பு தந்தால் ? இது ஏதோ மன்னர் காலத்தில் நடந்த கதை அல்ல.

தற்காலத்தில், சுதந்திர இந்தியாவில், ஜனநாயகம் உள்ளது என்று கூறிக்கொள்ளும் தமிழகத்தில்தான் நடந்திருக்கிறது.

தமிழக முதலமைச்சராக உள்ள கருணாநிதி, தன்னுடைய பாதுகாவலர்களாக உள்ள, மூன்று காவல்துறை ஆய்வாளர்களுக்கு, 2 கோடி மதிப்புள்ள வீட்டு மனையை வெறும் எழுபத்தைந்து லட்ச ரூபாய்க்கு கொடுத்திருக்கிறார். எதற்காக கொடுத்திருக்கிறார். தன்னை பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறார்கள் என்பதற்காக.



இவர்கள் மூன்று பேர் மட்டும்தான் பார்த்துக் கொள்கிறார்களா, இவரின் கான்வாயின் முன்னும் பின்னும் செல்லும் வண்டிகளில் உள்ள மற்றவர்கள் கருணாநிதியை பாதுகாப்பதில்லையா என்றால் அவர்களும் பாதுகாக்கிறார்கள்தான். ஆனால் அவர்களுக்கெல்லாம் இல்லாத இந்தப் பொற்கிழி இந்தப் பாண்டியனுக்கும், வினோதனுக்கும், கணேசனுக்கும் மட்டும் ஏன் என்பதை, கருணாநிதிதான் விளக்க வேண்டும்.

சரி, இவர்கள் நன்றாக வேலை செய்து, கருணாநிதியை நன்றாக பாதுகாக்கிறார்கள் என்றால், கோபாலபுரம் வீட்டையோ, சிஐடி காலனி வீட்டையோ அல்லவா எழுதிக் கொடுத்திருக்க வேண்டும் ? மக்களின் சொத்தை எதற்காக இந்த மூவருக்கும் கொடுக்க வேண்டும் ?

ஏனென்றால், மக்களின் சொத்துக்கள் அனைத்தையும், கருணாநிதி தன்னுடைய சொத்தாகவே நினைக்கிறார். இன்னும் 2016 வரை ஆட்சிப் பொறுப்பை கொடுத்துப் பாருங்கள். தமிழகத்தில் யாருக்குமே எந்தச் சொத்தும் இல்லாமல், இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் குடும்பத்துக்குள் பகிர்ந்து கொள்ளப் போகிறார்.

மூன்று பாதுகாவல் அதிகாரிகளில், கணேசனுக்கும், வினோதனுக்கும் மட்டும் “அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள்“ என்ற பிரிவின் கீழ் இரண்டு க்ரவுண்டு நிலம். பாண்டியனுக்கும் மட்டும் மனைவி மீனா பெயரில் வீட்டு மனை (பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா).

சரி, இந்த இரண்டு பேர் மட்டும் தான் அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் என்றால், தமிழக அரசில் பணியாற்றும், மற்ற ஊழியர்கள் எல்லாம் அப்பழுக்குள்ள ஊழியர்களா ?

அவர்களும் அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் என்றால் அவர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் நிலம் ஏன் வழங்கப் படவில்லை என்ற அதிகப்பிரசங்கி கேள்விகளையெல்லாம் சவுக்கு மாதிரி கேட்டுக் கொண்டு இருக்கக் கூடாது.




கருணாநிதியின் இந்த வள்ளல்தன்மை, இப்போது வந்ததல்ல. 1989-90ல் தமிழக முதலமைச்சராக கருணாநிதி இருந்த போது, அவருக்கு அப்போது பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த, உபேந்திரன் மற்றும் பிஎஸ்.சேதுராமன் ஆகிய இரண்டு ஆய்வாளர்களுக்கும், அண்ணா நகரில் தலா ஒரு க்ரவுண்டு நிலம் வழங்கியவர்தான் இந்தக் கருணாநிதி. அவர்கள் இருவரும் தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள்.

கருணாநிதி எப்படிப் பட்ட நபர் என்பதற்கு ஒரு உதாரணம். 1989ல் திமுக ஆட்சி நடக்கிறது. அப்போது பி.எஸ்.சேதுராமன் பாதுகாவல் அதிகாரி இருக்கிறார். அவரிடம் இன்னொரு போலீஸ் அதிகாரி போனில் உரையாடுகிறார்.

“என்ன சேதுராமன் எப்படி இருக்கீங்க ? “

“நல்லா இருக்கேன் சார். “

“என்னங்க ஜெயலலிதா வீட்ல இருந்து ராஜினாமா கடிதம் எடுத்தாங்களாமே…. உண்மையா ? “

“ஆமா சார். தலைவர் கரெக்டாதான் சார் பண்ணார். இந்த தொரை டிஜிபி இருக்கான்ல.. அவன்தான் உள்ள பூந்து கெடுத்து உட்டுட்டான் சார். இல்லன்னா எப்பபோ அந்த அம்மா போயிருக்கும் சார்“

ஜெயலலிதா, 6 மாதத்துக்கு ஒரு முறை, பால்கனியில் மட்டும் காட்சி தரும் காலம் அது.

ஒரிரு நாள் கழித்து சேதுராமனை அழைத்த கருணாநிதி, மேற்கூறிய உரையாடலை சேதுராமனிடம் ஒரு டேப்பில் போட்டுக் காட்டுகிறார். அதிர்ந்த சேதுராமன் திருதிருவென விழிக்கிறார்.

“என்னப் பத்தில்லாம் நல்லாதான் பேசிருக்க. துரை உனக்கு உயர் அதிகாரியில்ல ? இப்படியா மரியாதை இல்லாம பேசுறது ? “


“இனிமே இப்படிப் பேசாத. போ. “ என்றார். இதுதான் கருணாநிதி. கூடுதல் தகவல், அந்த சேதுராமன், கருணாநிதியின் தூரத்து உறவினர்.

பாண்டியன், வினோதன், கணேசன் ஆகிய மூன்று பேரும், “ட்ராலி பாய்ஸ்“ என்று பிரபலமாக அழைக்கப் படுகிறார்கள். இவர்கள் மூவருக்கும் ஏன் இந்தப் பெயர் வந்தது என்று வரலாற்று ஏடுகளை ஆராய்ந்ததில் சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை. சவுக்கு வாசகர்களுக்கு தெரிந்தால் கூறவும்.





இந்த மூவருக்கும், தலா 4780 சதுர அடிக்கு, முகப்பேர் ஏரித் திட்டம், உயர் வருவாய்ப் பிரிவில் வீட்டு மனை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் கருணாநிதி. இந்த வீட்டு மனை ஒதுக்கீட்டிற்கு, அரசு நிர்ணயித்த விலை 75 லட்ச ரூபாய். இந்த 75 லட்ச ரூபாயை இவர்கள் மூவரும் ஒரே நாளில் செலுத்துகிறார்கள்.

மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெரும் ஒருவர் எப்படி 75 லட்ச ரூபாய் செலுத்த முடியும் என்ற சந்தேகம் எழுந்து, FACT இந்தியா என்ற ஊழல் ஒழிப்பு அமைப்பு ஒன்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு செப்டம்பர் 2009ல் புகார் ஒன்றை அனுப்புகிறது. நேர்மையான அதிகாரி என்று பரவலாக அறியப்படும் ராமானுஜத்திடம் அந்தப் புகார் நேரில் கொடுக்கப் படுகிறது. அந்த நேர்மையான (?????) ராமானுஜம்,(சார் உங்களைப் பற்றி சவுக்கு தனியே எழுதும்) அந்தப் புகாரின் மேல் மூன்று மாதங்கள் படுத்து உறங்குகிறார். துயில் கலைந்தவுடன், டிசம்பர் 2009ல், அந்தப் புகார் நம்மிடம் இருந்தால் ஆபத்து, என்று கருதி, இதை டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்புகிறார். (ஊழல் புகாரையெல்லாம் டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்புரீங்களே நீங்க என்ன போஸ்ட்மேனா ராமானுஜம் சார் ? இந்த சவுக்கோட பதிவையும் ஒரு ப்ரின்ட் எடுத்து லத்திக்கா சரணுக்கு அனுப்புங்க சார்.)

இத்தோடு இந்தக் கதையில் இடைவேளை. இப்போ ஃப்ளாஷ் பேக். 2008ம் ஆண்டு மார்ச் மாதம்தான் இந்த மூவருக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப் பட்டது. அப்போது ஜாபர் சேட்டிடம், இந்த மூவரும் இந்தத் தகவலைத் தெரிவிக்க, அவர்களிடம் சிரித்துப் பேசி விட்டு சாதாரண இன்ஸ்பெக்டர் பயலுங்களுக்கு ரெண்டு கோடி மதிப்புள்ள வீட்டு மனையை கொடுத்தால், ஐஜிக்கும் இன்ஸ்பெக்டருக்கும் என்ன வித்தியாசம் என்று பொருமுகிறார்.

அவரிடம் நெருக்கமான அந்த ஆன்டெணா அதிகாரியிடம் ஜாபர் சேட், “Has the CM gone insane ? Why is he allotting such prime property to these bloody fellows ? They are not worth it. If these fellows are rewarded like this, what respect will they have for IPS officers ? “ என்று கூறுகிறார்.




ஜுன் 2008 வாக்கில், மருத்துவர் ராமதாஸ் அவருடைய தொலைபேசியை ஒட்டுக் கேட்டு விட்டார் என்று, ஜாபர்சேட் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார். இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று எம்எல்ஏ வேல்முருகன் மூலமாக முயற்சி செய்கிறார் ஜாபர் சேட்.



பாண்டியன் சார். 2008 ஜுன் மாதத்தில், மக்கள் டிவியில, உங்க மூணு பேருக்கும் வீட்டு மனை ஒதுக்கப் பட்டிருக்குன்னு செய்தி வந்தது தெரியுமா ? அது மக்கள் டிவிக்கு எப்படி தெரியும்னு நெனைக்கிறீங்க ?

சவுக்கு, மருத்துவர் ராமதாசை சந்தித்த போது, ராமதாஸ் மூன்று அரசாணைகளை காண்பித்து, இது உண்மையான ஆவணமா எனக் கேட்டார். அந்த அரசாணைகள் உங்கள் மூவருக்கும் வீட்டு மனை ஒதுக்கீடு செய்த ஆவணங்கள். சவுக்கு உண்மையான ஆவணங்கள்தான் என உறுதி செய்ததும் “அந்தப் பய, இதெல்லாம் கொடுத்தா நான் அவன மன்னிச்சுடுவேன்னு நெனைக்கிறான். ஆனா, நான் அவன உட மாட்டேன்“ என்று கூறினார்.

பாண்டியன் சார். மக்கள் டிவியில் இந்தத் தகவல் ஜுன் 2008ல் எப்படி வந்தது என்று இப்போது தெரிகிறதா ? என்னாதான் நெருங்கிப் பழகினாலும், அவங்க ஐபிஎஸ்தான், நீங்க சாதாரண காண்ஸ்டபிள் தான் சார். அதை மறந்துடாதீங்க. உங்கள என்னைக்குமே ஜாபர் சேட் மதிக்க மாட்டார் சார்.

ஃப்ளாஷ் பேக் முடிந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வருகிறது.

FACT இந்தியா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ட்ராலி பாய்ஸ் பற்றிய புகாரை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் விசாரணை நடத்த உத்தரவிடும் படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.

வழக்கு விசாரணை தொடங்குகிறது. நீதிமன்றம் முழுவதும் வழக்கறிஞர்களை விட உளவுத்துறையினர் அதிகமாக இருக்கின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து சுதாகர் என்ற ஆய்வாளர் அரசு வழக்கறிஞருக்கு உதவுவதற்காக வந்திருக்கிறார்.

மனுதாரர் சார்பில் ராதாகிருஷ்ணன் என்ற சிங்கம் தன் கர்ஜனையை தொடங்குகிறது. ஒரு புகாரை பதிவு செய்து விசாரணை நடத்த மறுத்ததற்காக நீதிமன்றத்தை அணுக வேண்டிய ஒரு அவலச் சூழல் உள்ளது என்று தன் வாதத்தை தொடங்கினார்.



உடனே அரசு வழக்கறிஞர் சரவணன், இது விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்கு. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார். சரவணன் சார், மனுதாரர் செல்வராஜை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ? அவர் எப்படி இருப்பார் என்று தெரியுமா ? அப்புறம் எதற்கு சார் இப்படி குதிக்கிறீர்கள். எவ்வளவு குதித்தாலும், நீங்கள் எந்தக் காலத்திலும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆகவே முடியாது.

சவுக்கு அது போன்ற ஒரு துன்பியல் சம்பவம் நடப்பதை அனுமதிக்காது. அரசு வழக்கறிஞராக நீங்கள் அந்த நீதிமன்றத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்ற விபரங்கள் எல்லாம் சவுக்குக்கு தெரியும்.

விளம்பரத்திற்காக என்று சரவணன் கூறியதும், சிங்கம் சீறியது. அரசு வழக்கறிஞருக்கு, இது போலக் கூறுவதற்கு உரிமையில்லை. அவர் தனது வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டும் என்று உரத்த குரலில் கூறினார்.

நீதியரசர் சி.டி.செல்வம் ராதாகிருஷ்ணன் அமைதியாக இருங்கள் நீங்கள் ஏன் கோபப் படுகிறீர்கள், என்ற கூறி விட்டு, ராதாகிருஷ்ணன் தனது வாதத்தை தொடங்குவதற்கு முன்பே, உங்களிடம் அவர்கள் 75 லட்ச ரூபாயை கட்டியிருக்கிறார்கள் என்பதைத் தவிர உங்களிடம் வேறு ஆதாரங்கள் இல்லை. You cannot go on a fishing expedition I am going to dismiss the petition என்று கூறினார்.

75 லட்ச ரூபாயை கட்டியதற்கான ஆதாரமும், அதைக் கட்டிய அரசு ஊழியரின் மாத ஊதியம் 10,000 என்பதையும் மீறி என்ன எதிர்ப்பார்க்கிறார் நீதியரசர் என்பது வாதாடிய ராதாகிருஷ்ணனுக்கு புரியவில்லை.

அவர், நீங்கள் மனுவை தள்ளுபடி செய்யுங்கள், ஆனால் எனது வாதத்தை பதிவு செய்தவுடன் தள்ளுபடி செய்யுங்கள் என்று கூறினார்.

வேறு வழியின்றி, சரி வாதிடுங்கள் என்று கூறினார் நீதியரசர். சிங்கம் தனது கர்ஜனையை தொடங்கியது. லஞ்ச ஒழிப்புத் துறையின் பணி என்ன, ஒரு புகார் வந்தால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று வாதிட்டுக் கொண்டிருக்கையில் உணவு இடைவேளை வந்தது.

மதியம் வழக்கு தொடங்கியதும் வழக்கமாக அவசர வழக்க குறித்த நீதிபதியிடம் முறையிடும் நடைமுறையின் படி, வழக்கறிஞர்கள், நீதியரசரிடம் தங்களது வழக்கு குறித்து முறையிட தொடங்கினார்கள். ஒரிருவரை கேட்ட நீதியரசர், நான்காவது நபர் தொடங்கியதும், சமீப காலங்களாக, நீதிமன்றத்தின் நேரத்தை மூன்றாவது நபர்கள் தேவையின்றி வீணடிப்பது நடந்து வருகிறது, இது தவிர்க்கப் பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

அடுத்து ஒரு வழக்கறிஞர் பேச தொடங்கியதும், நீங்கள் இப்படியே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால், நான் வழக்கு விசாரணையை எப்படிப் பார்ப்பது என்று கோபப் பட்டார். அனைவரும் அமைதியானார்கள்.

சிங்கம் தனது கர்ஜனையை மீண்டும் தொடங்கியது. ஒரு குடிமகன், ஒரு புகாரை பதிவு செய்யக் கூட நீதிமன்றத்தின் கதவுகளை தட்ட நேரிடும் ஒரு அவலம் இந்த நாட்டில்தான் உண்டு. பத்தாயிரம் ரூபாய் ஊதியம் பெரும் மூன்று அரசு ஊழியர்கள் ஒரே நாளில் எப்படி 75 லட்சம் கட்டினார்கள். அவர்கள் கடன் வாங்கிக் கட்டியிருக்கலாம், தங்களின் பூர்வீகச் சொத்தை விற்றுக் கட்டியிருக்கலாம், நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த விபரம் விசாரணை செய்தல்லவா கண்டிறியப் பட வேண்டும் ? விசாரணையே நடக்காமல் ஒரு வருடமாக அமைதியாக இருந்தால் எதையோ மறைக்கிறார்கள் என்று தானே பொருள் ? லஞ்ச ஒழிப்புத் துறையில் விசாரணை எப்படி நடத்த வேண்டும் என்று கூறும் Vigilance Manual புத்தகத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறதே அதை ஏன் லஞ்ச ஒழிப்புத் துறை பின்பற்றவில்லை என்று கூறி விட்டு, உச்சநீதிமன்றம் ஊழல் புகாருக்கு ஆளானவர்களில் பாரபட்சம் காட்டாமல் அனைவர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்திருப்பதை சுட்டிக் காட்டினார்.



ஒன்றரை மணி நேரம் வாதிட்டு முடித்தபின், அரசு வழக்கறிஞர் ஒரு இரண்டு பக்க அறிக்கையை நீதியரசரிடம் கொடுத்தார். அந்த அறிக்கையில், மனுதாரரின் புகார் டிஜிபியிடம் அனுப்பப் பட்டதாகவும், அதன் மீது விசாரணை நடத்திய டிஜிபி இவர்கள் இன்னொருவரோடு கூட்டு ஒப்பந்தம் போட்டு அதேன் மூலம் பணம் செலுத்தியிருப்பதால், இவர்கள் மீது எவ்வித விசாரணையும் நடத்த முகாந்திரம் இல்லை என்று கூறியிருப்பதாக தெரிகிறது.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தானே அறிக்கை நீதியரசரிடம் கொடுக்கப் பட்டது. அதற்கு முன்பே இதை தள்ளுபடி செய்கிறேன் என்று ஏன் நீதிபதி சொன்னார் ? என்று கேள்வி கேட்டு நீதிமன்றத்தின் உள்விவாகரங்களுக்குள் தலையிட்டீர்கள் என்றால், நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகி விடுவீர்கள் சொல்லி விட்டேன். சவுக்கு வாசகர்களை பாதுகாக்கும் பொறுப்பும், சவுக்குக்கு உண்டு.

இருவரும் வாதங்களை முடித்த பின் நீதியரசர், தனது இரண்டு கைகளையும் தலையில் வைத்த படி குனிந்து இரண்டு நிமிடங்கள் இருந்தார். பிறகு தலையை கோதினார். (நீதிக்கு தலைவணங்கு என்பதை சிம்பாலிக்கா சொல்றாரோ ?) பிறகு, டிஜிபி விசாரணை நடத்தி முடித்து விட்டதால், அதன் அடிப்படையில், இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.

இந்த சிறப்பான தீர்ப்பு அளித்த நீதியரசரை யார் என்று தெரிந்து கொள்ள சவுக்கு வாசகர்கள் ஆவலாக இருப்பீர்கள் தானே ? இதோ அந்த நீதியரசர்.



லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தால், அதை டிஜிபிக்கு அனுப்பும் ஒரு அற்புதமான நடைமுறையை நீதிமன்றமே ஏற்றுக் கொண்ட நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை எதற்கு ? இழுத்து மூடி விடலாமே ? இந்த லட்சணத்தில், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு, அடிப்படை ஊதியத்தில் 15 சதவிகிதம் சிறப்பு ஊதியமாம்.

வழக்கு முடிந்து விட்டது. இனி சவுக்கின் புலன் விசாரணை. இந்த மூன்று பேருக்கும் வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப் பட்டதா …. பாண்டியன் என்ன செய்கிறார்… அவருக்கு 75 லட்ச ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்த இடத்தை கல்யாண்குமார் என்பவரின் மனைவி பத்மா என்பவருக்கு ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சத்திற்கு விற்கிறார்.




வினோதன் என்ன செய்கிறார். தனக்கு ஒதுக்கப் பட்ட மனையை சண்முகம் என்பவரின் மனைவி கவுரி என்பவருக்கு, ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சத்துக்கு விற்கிறார். கணேசன் என்ன செய்கிறார்…. அவரும் கல்யாண்குமார் என்பவரின் மனைவி பத்மா என்பவருக்கு ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சத்திற்கு விற்கிறார்.

புரியிற மாதிரி சொன்னா. ஒரே நாளில் “கை மாத்தி விட்டதுக்கு, இவங்க மூனு பேருக்கும் லாபம் தலா ஒரு கோடி. “ ஜாபர் சேட்டுக்கு கோபம் வர்றது நியாயம் தானே ?

இப்போ பாண்டியனோட வீட்டு மனையில, பெரிய பங்களா கட்டிகிட்டு இருக்காங்க சார். சும்மா சூப்பரா இருக்கு.








இப்போ சொல்லுங்க சார். பாதுகாப்புக்கே பாதுகாப்பு தலைப்பு பொருத்தம் தானே ?
சவுக்கு

Read more...

சனி, 31 ஜூலை, 2010

கடவுள்...

http://www.garytorrisistudio.com/New%20WebSite%20Art/Everything/Art/JPG%27s/Educational/TeacherStudents_lg.jpgஆமாம் அய்யா! கல்லை வணங்காதே என்று சொன்ன பெரியாரை கல்லாக்கி அந்த சிலைக்கு மாலை போட்டு மரியாதை செலுத்தும் பகுத்தறிவு  (!) யாருக்கு வரும்.
நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.
 
"நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?"
 
"நிச்சயமாக ஐயா.."
 
"கடவுள் நல்லவரா?"
 
"ஆம் ஐயா."
 
"கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?"
 
"ஆம்."
 
"எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?"
 
(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)
 
"உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?"
 
"ஆம் ஐயா.."
 
"சாத்தா‎ன் நல்லவரா?"
 
"‏இல்லை."
 
"எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?"
 
"கடவுளிடமிருந்துதா‎ன்."
 
"சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?"
 
"ஆம்."
 
"அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?"
 
(மா‎ணவர் பதில் சொல்லவில்லை)
 
"இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?"
 
......
 
"அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?"
 
.......
 
"ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?"
 
"ஆம் ஐயா.."
 
"நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது 'கடவுள் ‏ இல்லை' என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?"
 
"ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது."
 
"ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே.." ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.
 
(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)
 
"ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?"
 
"நிச்சயமாக உள்ளது."
 
"அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?"
 
"நிச்சயமாக."
 
"இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை."
 
(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)
 
"ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). "வெப்பம் ‏இல்லை" என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது."
 
(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)
 
"சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?"
 
"ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது."
 
"நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?"
 
"சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?"
 
"ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது."
 
"பிழை?? விளக்கிக் கூற முடியுமா?"
 
"ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.
 
அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎ன். மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.
 
இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் "வாழ்வு இனி இல்லை" என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏
 
"சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?"
 
"”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்." பேராசிரியர் பதிலுரைத்தார்.
 
"உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?"
 
(பேராசிரியர் த‎ன் தலையை 'இல்லை' என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)
 
"அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே 'ஒருவகையா‎ன' அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?"
 
(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)
 
"இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?"
 
(வகுப்பறை 'கொல்'லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)
 
"யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?"
 
"அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று."
 
"மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?"
 
(மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)
 
"நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!"
 
"அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை."

Read more...

சனி, 22 மே, 2010

குண்டக்க மண்டக்க!


page.jpg

வணக்கம் நேயர்களே! இது உங்கள் அபிமான சேட்டை டி.வியின்
 'குண்டக்க..மண்டக்க' நிகழ்ச்சி! இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில்
கலந்து கொள்வதற்காக ஆளுங்கட்சியைச் சேர்ந்த திரு. சுரண்டலூர்
சுப்பாமணியும்
எதிர்க்கட்சியைச் சேர்ந்த திரு.கொட்டாவிப்பாளையம்

 குருவப்பனும்
வந்திருக்கிறார்கள். வணக்கம் திரு.சுப்பாமணி அவர்களே!
வணக்கம் திரு.குருவப்பன் அவர்களே!

சுப்பாமணி: வணக்கம்!

குருவப்பன்: வணக்கம்!

சேட்டை: இன்று மாலை மத்திய போக்குவரத்துத் துறை செயலாளர் ஒரு
அறிவிக்கை வெளியிட்டிருக்கிறார். அதன்படி, இனிமேல் தேசிய நெடுஞ்சாலையில்
பயணம் செய்கிற சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்
டோல்கேட்டில் பணம் செலுத்த வேண்டாம்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆளுங்கட்சிப் பிரதிநிதியாக இது குறித்து பொதுமக்களுக்கு நீங்கள்
 என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

சுப்பாமணி: இது வரவேற்கத்தக்க விஷயம்! நாங்கள் எங்களுக்காகவே
மக்கள் வாழ்க்கையை  அர்ப்பணித்துக்...மன்னிக்கவும்...மக்களுக்காகவே
 எங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்! மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களிடம் ஒவ்வொரு முறையும் தேசிய
நெடுஞ்சாலையில் இப்படி பெருந்தொகையை வசூலித்தால் எப்படி
நாங்கள் மக்களுக்கு சேவை செய்ய முடியும்?

சேட்டை: ஐயா! குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்! வெறும் முப்பது
ரூபாய் தானே டோல்-கேட்டில் வசூலிக்கிறார்கள்? அதைக் கூடவா
 உங்களால் கொடுக்க முடியாது?

சுப்பாமணி: முப்பது ரூபாயா? மீது தொள்ளாயிரத்துத் தொண்ணூத்தி
ஒன்பது காருக்கு யாரு காசு கொடுக்கிறது? பொதுவாழ்க்கையில்
ஈடுபடத் தொடங்கிவிட்டால் பாத்-ரூம் தவிர வேறு எங்குமே தனியாகப்
போக முடியாதல்லவா? ஒவ்வொரு வாட்டியும் முப்பதாயிரம்,
நாற்பதாயிரம் என்று கொடுத்தால் அப்புறம் சம்பாதிக்கிறதெல்லாம்...
அதாவது, வாங்குற சம்பளம் எல்லாம் திரும்ப அரசாங்கத்துக்கே
 போயிடாதா?

சேட்டை: திரு.குருவப்பன் அவர்களே! எதிர்க்கட்சியின் பிரதிநிதியாக
இது குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

குருவப்பன்: இது அதிகார துஷ்பிரயோகம்! மக்களின் வரிப்பணத்தை
வீணடிக்கிறார்கள்! இதைக் கண்டித்து நாளை முதல் தமிழ்நாட்டின்
எல்லா டோல்-கேட்டுகளின் முன்பும் எங்கள் கட்சித்தொண்டர்கள்
கோல்கெட் பேஸ்ட்டால் பல்துலக்கி நாடுதழுவிய போராட்டத்தை
மேற்கொள்வார்கள்.

சுப்பாமணி: சேட்டை! இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதித்தபோது,
இதனால் பொதுமக்களின் வரிப்பணத்திற்கு இழப்பு ஏற்படாமல் இருக்க
 ஒரு யோசனை சொன்னோம். அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற
உறுப்பினர்களுக்கும் ஆளுக்கு ஒரு ஹெலிகாப்டர் வழங்கினால்
அவர்கள் டோல்-கேட்டில் பணம் கட்ட வேண்டிய அவசியமே இருக்காது
என்று நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால், இந்தியாவில் அந்த அளவு
எண்ணிக்கையில் ஹெலிகாப்டர் டிரைவர்களும் ஹெலிகாப்டர்
 கிளீனர்களும் கிடையாது என்பதால் அந்த யோசனை கைவிடப்பட்டது.

குருவப்பன்: டிரைவர் இல்லாவிட்டால் என்ன? எல்லா ஆளுங்கட்சி
உறுப்பினர்களும் ஹெலிகாப்டர் ஓட்டக் கற்றுக்கொள்ளலாமே?

சுப்பாமணி: முதலில் நீங்கள் கற்றுக்கொள்வீர்களா குருவப்பன்?
உங்கள் கட்சிக்காரர் ஹெலிகாப்டர் ஓட்டப் பயிற்சி பெற்றாரே, என்ன நடந்தது?

சேட்டை: என்ன நடந்தது?

சுப்பாமணி:  ஹெலிகாப்டர் ஆகாயத்தில் பறந்தபோது, 'ரொம்பக் குளுருது,'ன்னு
ஹெலிகாப்டர் மேலே சுத்திக்கிட்டிருந்த ஃபேனை ஆஃப் செய்து விட்டார்!

குருவப்பன்: இது அப்பட்டமான அவதூறு! மத்திய அரசு மலிவாய்க் கிடைக்கிறது
என்று யூகோஸ்லாவியாவிலிருந்து ஹெலிகாப்டர்களை இறக்குமதி செய்து
விட்டார்கள். அதில் மேலே போக ஒரு பொத்தான், வலது பக்கம் போக ஒரு
பொத்தான், இடது பக்கம் போக ஒரு பொத்தான் என்று மொத்தமே மூன்று
பொத்தான்கள் தானிருந்தன. கீழே இறங்குவதற்குப் பொத்தானே இல்லை!
ஏன் என்று கேட்டால், கமிஷன் தொகை அதிகமாகக் கொடுத்துக்
கட்டுப்படியாகததால் அந்த ஒரு பொத்தானை மட்டும் வைக்காமல்
விட்டு விட்டோம் என்று சொல்லி விட்டார்கள். பரங்கிப்பேட்டையிலிருந்து
பறந்த எங்களது கட்சிக்காரர் இறங்கத் தெரியாமல் பாராமுலா வரைக்கும்
 போய்விட்டார்! இனிமேல் அவரை பாகிஸ்தான்காரர்கள் இறக்கினால் தான் உண்டு.

சேட்டை: திரு.குருவப்பன்! இது போன்ற விஷயங்களைப் பற்றி ஆளுநரிடம்
முறைப்படி புகார் கொடுக்காமல் தினசரி ஏன் போராட்டங்களிலேயே ஈடுபடுகிறீர்கள்?
அண்மையில் கூட தேனாம்பேட்டை சிக்னல் அருகே உங்கள் தலைமையிலே
தொண்டர்கள் தீக்குளிக்கப்போவதாக பரபரப்பை ஏற்படுத்தினீர்களே?

சுப்பாமணி: அதெல்லாம் அவர்களது நாடகம்! இவர்கள் தீக்குளிப்பதாகச்
சொன்னதும் சாலையில் போக்குவரத்தே ஸ்தம்பித்து விட்டது! பொதுமக்கள்
அவரவர் வாகனங்களிலிருந்த பெட்ரோலைக் காலி செய்து பாட்டிலில்
நிரப்பி இவர்களிடம் கொடுப்பதற்குள்ளாகவே எதிர்க்கட்சித்தொண்டர்கள்
"போராட்டம் வெற்றி!" என்று கோஷம் போட்டுக்கொண்டு தலைதெறிக்க
ஓடி விட்டார்கள்!

சேட்டை: விவாதம் திசைதிரும்புகிறது! சுப்பாமணி அவர்களே! அரசாங்க
கஜானாவுக்கு முப்பது ரூபாய் கூட கொடுக்க விரும்பாத அரசியல்வாதிகள்
 என்று மக்கள் குற்றம் சாட்ட மாட்டார்களா?

சுப்பாமணி: இது தவறான கருத்து! மக்களுக்காக நாங்கள் எவ்வளவு
வேண்டுமானலும் செலவழிக்கத் தயார் என்பது அவர்களுக்குத் தெரியாதா?
 சந்தேகமிருந்தால் அடுத்த இடைத்தேர்தலின் போது அதை மீண்டும்
நிரூபித்துக்காட்டுகிறோம். எங்களது சவாலை சந்திக்க எதிர்க்கட்சிகள்
தயாரா என்று சூளுரை விடுகிறேன்.

குருவப்பன்: மிகவும் குறுகிய கண்ணோட்டத்தோடு நிறைவேற்றப்பட்ட
 கோரிக்கை இது! எங்கள் வசம் வாகனங்கள் அதிகமில்லை என்பதற்காகவே
 திட்டமிட்டு இப்படியொரு சதித்திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
அடுத்த முறை எங்களது ஆட்சி மலர்ந்தால் இதை நாங்கள் கண்டிப்பாக
மாற்றியமைப்போம்.

சேட்டை: எப்படி? மீண்டும் எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற
 உறுப்பினர்களும் டோல்-கேட்டில் பணம் செலுத்த வேண்டும் என்று சட்டம்
 நிறைவேற்றுவீர்களா?

குருவப்பன்: இல்லவே இல்லை! சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு
 அளித்தால் மட்டும் போதாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்கள்
பிரதிநிதிகளுக்கு இலவசமாக பெட்ரோலும் டீசலும் வழங்கப்பட வேண்டும்
என்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.

சுப்பாமணி: நீங்கள் இப்படி ஏறுக்கு மாறாக கோரிக்கை வைப்பீர்கள் என்று
தெரிந்து தான், மக்கள் பிரதிநிதிகளின் வாகனங்களுக்கு காப்பீட்டிலிருந்து
விலக்கு அளிக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்திருக்கிறோம்.

குருவப்பன்: நீங்கள் கோரிக்கை தானே வைப்பீர்கள்? நாங்கள் மக்கள்
பிரதிநிதிகளின் வாகனங்களுக்கு சுங்கவரி, கலால்வரி, உற்பத்தி வரி,
விற்பனை வரி, ஜனவரி, பிப்ருவரி, முகவரி போன்ற அனைத்திலிருமிருந்து
 விலக்கு வேண்டுமென்று நாடுதழுவிய போராட்டம் நடத்துவோம்.

சுப்பாமணி: நீங்கள் வரிவிலக்கு மட்டும் தானே கேட்பீர்கள்? நாங்கள் அனைத்து
மக்கள் பிரதிநிதிகளுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பி.எம்.டபூள்யூ, டயோட்டா,
மிட்சுபிஷி,ஹூண்டாய், ஹோண்டா போன்ற வாகனங்களையே இலவசமாக
வழங்கக்கோரி விட்டோம்.

சேட்டை: என்னது, எல்லா அரசியல்வாதிகளுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும்
இலவசமாக கார் கொடுப்பதா? பொதுமக்கள் இனிமேல் மாட்டுவண்டியில் போக
வேண்டியது தானா?

குருவப்பன்: சேட்டை! கட்சி அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறது.
பேசிமுடித்து விட்டு வருகிறேன்.

சேட்டை: சரி, பேசுங்கள்! சுப்பாமணி அவர்களே! இப்படியே பணமே செலுத்தாமல்
 இலவசமாக எல்லாம் நடந்தால் கஜானா காலியாகி விடாதா?

சுப்பாமணி: நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் அல்லவா? மக்கள் மட்டும் எல்லாம்
 இலவசமாய் பெறலாம். நாங்கள் பெறக்கூடாதா?

குருவப்பன்: சரியாகச் சொன்னீர்கள் சுப்பாமணி!

சேட்டை: என்னது, எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு ஆளுங்கட்சியை
ஆதரிக்கிறீர்கள்?

குருவப்பன்: யார் எதிர்க்கட்சி? நான் போட்டிருக்கிற சட்டையில் ஒரு
 பொத்தான் இல்லையாம். அதனால் கட்சிவிரோதச் செயல்பாட்டுக்காக
என்னை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியிருப்பதாக இப்பொது தான்
போன் வந்தது. சுப்பாமணி அண்ணே, போகும்போது அப்படியே
என்னையும் உங்க கட்சிக்குக் கூட்டிக்கிட்டு போறீங்களா?

சுப்பாமணி: வாங்க வாங்க! ஆனா, என் தொண்டர்கள் நிறைய பேரு
காத்திட்டிருக்காங்க! நீங்க உங்க வண்டியிலேயே பின்னாலேயே வர்றீங்களா?

குருவப்பன்: அதனாலென்ன அண்ணே, நான் பாட்டுக்கு டிக்கியிலே உட்கார்ந்து
 கிட்டு வர்றேன். நம்ம கட்சி அலுவலகம் வரைக்கும் தானே? ஹிஹி!

சேட்டை: முடிவா இந்தப் பிரச்சினையைப் பத்தி என்ன சொல்றீங்க
குருவப்பன் அவர்களே?

குருவப்பன்: இது விஷமத்தனமான பொய்ப்பிரச்சாரம்! மக்களாட்சியிலே
 மக்களுக்காக சேவை செய்கிற மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்களாகக் கொடுக்கிற
சலுகையை மக்கள் விரோத சக்திகள் எதிர்ப்பது மக்களின் மன்தை நோகடிக்கும்
 செயல் என்பதை மக்கள் புரிந்து கொள்ளுவார்கள்.

சேட்டை: சுத்தமாப் புரியலே!

சுப்பாமணி: குருவப்பன், நல்லாப் பேசினீங்க! இனிமே நாம ரெண்டு பேரும்
 நகமும் சதையுமா, கண்ணும் இமையுமா, காரும் ஸ்டெப்னியுமா பிரியாம
இருப்போம். சேட்டை, பேட்டியை முடிச்சிட்டு வந்து டிக்கியைத் திறந்து விடு!
அண்ணனைக் கூட்டிக்கிட்டுப்போகணும்.

--

சேட்டைக்காரன்

Read more...

வியாழன், 20 மே, 2010

லஞ்சம் , லஞ்சம் , ஊரெல்லாம் லஞ்சம்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEVFdgUpO4TZ6kEnG54zc4G-joMZImVIocM4qoX675QB2NGsyLHYKfkyA2bV1lEUpaqlNqPWAAQaAuOSbiVMxyz-H5lWpnuccS6-Is8zvLgxnGGzfI-7tPRYgSQzAJvvtAFa0zcjlyZSyh/s320/lanjam+pen.jpghttp://2.bp.blogspot.com/_eBi5s6EFNuI/StLr_BvJOII/AAAAAAAAAQs/aQi2Pnff2U8/s320/mumbai_police_taking_bribes.jpg
http://inioru.com/wp-content/uploads/2009/09/lansam.jpghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzmNBtBi1BuFic6dis1rJRN2hrCOu3CcmHBEBOHBw7gbtoJ3JHAJoliwnbXqZMfX1W-xV5UWdUMddqDeB6p0V1kbrdImY_1Mxq2cvRtBevsS13QYr5rC_5Y6QS0hLUTF6-afR5J2iHKRCt/s400/tblkutramnews_73374575377.jpgகனவு , ஒரு நாள் நிஜமாகும் ..... என்கிற தலைப்பில் பட்டாப்பட்டி ஒரு பதிவு போட்டு அவருக்கு நம் சமுதாயத்தின் மேல் உள்ள கோபத்தை மிக காட்டமாக கூறியிருந்தார் .....

அதை பற்றி எனது கருத்து......

லஞ்சம், பெட்ரோல் விலை இவை இரண்டையும் எந்த ஒரு நாடு கட்டுக்குள் வைத்திருக்கிறதோ அது தானாகவே முன்னேறிவிடும்.

லஞ்சம் எங்கே ஆரம்பமாகிறது ? (இப்ப எல்லாம் பிறக்கும் போதே லஞ்சம் குடுத்து தான் பிறக்க வேண்டி உள்ளது , எல்லா அரசு பொது மருத்துவமனைகளிலும் லஞ்சம் குடுத்தால் தான் பிரசவம் பார்கிறார்கள் ) .

நமது தேவைகள் அவசரமாகும் போது . உதாரணமாக,
நமக்கு ஓட்டுனர் உரிமம் , கடவுச்சீட்டு ( அட தூய தமிழ், மங்கு அசத்துடா ) இவற்றை பெற இரண்டு நாள் அலைய நேரமில்லை (நாம் நேராக சென்றால் நிச்சயம் லஞ்சம் இல்லாமல் காரியம் முடியும்) , நேராக முகவர்களிடம் செல்கிறோம் , முகவர்கள் வேலை விரைவில் முடிய லஞ்சம் கொடுகிறார்கள் . அதுமட்டும் அல்லாது அரசு கேட்டுக்கும் சான்றிதல்கள் தர இயலாதவர்கள் இன்னும் அதிகமாக லஞ்சம் கொடுக்க முன் வருகிறார்கள். இப்பொழுது அரசு அதிகாரிகள் மட்டுமல்ல , மக்களும் லஞ்சம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.

எங்க ? ஏன் ? எதற்கு ? எப்படி ?
(நிறுத்து நிறுத்து , ஏன் இந்த டென்சன் கோபம் )

ஒட்டு போடத்தான் .

இருபது கோடி செலவு செய்து வெற்றிபெறும் சட்டமன்ற உறுப்பினர் ,
என்ன செய்வார் ?
????????
( ம் ம்ம்ம்ம்.... தெருவுல நாய்
குறைக்கும் போது , பக்கத்து கோயில்ல உண்ட கட்டி வாங்கி சாப்புடுவாறு)

இவற்றை சரி செய்ய என்ன வழி?

(ஒன்னியும் பன்னமுடியாது .
)

சட்டத்தை கடுமையாக்கனும்.

அது அவ்வளவு சாதாரணமாக முடியாது
, ஏன் ?

வளைகுடா நாடுகளில் சட்டம் மிக கடுமையானது , அது போன்று கடுமையாக்க நாம் நம் சமுதாயத்தை ஆணி வேரிலிருந்து சரிசெய்ய வேண்டும் , நமக்கு பிறந்ததிலிருந்து உணவு , உடை , தங்குமிடம் , பாசம் அனைத்தும் தானாகவே கிடைத்து விட்டன , வளர, வளர நாகரீகம் சொல்லிக்கொடுக்கப்பட்டு எது சரி , எது தவறு , எது குற்றம் என்பது தெளிவாக சொல்லிகொடுக்கபடுகிறது .நமக்கு இந்த கடுமையான சட்டங்கள் பொருந்தும் .

ஆனால் ?????

சென்டல் , எக்மோர் ரயில் நிலையங்கள் , குப்பை மேடுகள் போன்ற வற்றில் அனாதையாக திரியும் சிறுவர்கள் , அவர்களுக்கு உடை இல்லை, தங்குமிடம் இல்லை , பாசம் இல்லை , இருப்பது எல்லாம்........

பசி, பசி ,பசி ???


முதலில் திருட ஆரம்பிகிறார்கள் , பின்பு ரவுடியிசம் , மாமூல் , கட்டபஞ்சாயத்து ............................................ (மங்கு ரொம்ப யோசிக்காத , மூளைக்காய்ச்சல் வந்திட போகுது )

இவர்கள் செய்யும் தவறுக்கும் அந்த கடுமையான சட்டம் பொருந்துமா ???????

லஞ்சம் வாங்குவது, ஊழல் செய்வது எல்லாம் ஒருவித திருட்டு தான் , அவனுக்கும் , பசிக்காக திருடுபவனுக்கு ஒரே தண்டனை கொடுக்க இயலுமா ??????

எனவே ஆணிவேரிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது ஏன் கருத்து , உடனடியாக முடியாது மிக நீண்ட காலம் ஆகலாம் , அனால் இப்பொழுதே அந்த வேலை ஆரம்பிக்க படவேண்டும் ,

அதை யார் செய்வது ?
வேறு யார் அரசாங்கம் தான் .

எந்த அரசாங்கம் ?
தொகுதிக்கு இருபது கோடி செலவு செய்து வெற்றி பெரும் அரசு.

ஏன் இருபது கோடி செலவு செய்கிறார்கள் ? நம்ம மக்கள் லஞ்சம் கேட்பதால். (பாஸ் முன்னாடி தான் பாஸ் மக்களுக்கு லஞ்சம் கொடுத்தார்கள் , இப்ப எல்லாம் மக்களே கேட்க ஆரம்பிச்சுடாங்க )

பட்டாப்பட்டி :ங்கொய்யாலே..... பைனலா நீ என்னா சொல்ல வர்ற ?
....ம்ம்ம்..... சென்னைல நேத்து நைட்ல இருந்து நல்ல மழை

                                                                                       - மங்குனி அமைச்சர்

Read more...

அரசியல் பணியிலும் குழந்தை தொழிலாளர்கள்!!

மேற்குவங்க மாநிலத்தில் நகராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.​ இந்த தேர்தலுக்கான பிரசாரத்தின் போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் பயன்படுவதற்காக அக்கட்சியின் கொடிகளை தயார் செய்யும் பணியில் பிர்பம் மாவட்டம் போல்பூர் நகரில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுள்ள பள்ளிச் சிறுவர்கள்.

Read more...

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

"இந்து என்று சொல்லாதே ....!!!!!



"இந்து  என்று சொல்லாதே
ராமன் பின்னே செல்லாதே "
என்ற    திரு துரை..சண்முகம் 
அவர்களின் கவிதை நூலில் இருந்து 
சில வரிகள் .......


அது என்ன இல்லாதது- பொல்லாதது
இல்லாதது - ராமன் பாலம்
பொல்லாதது - இந்துமதம்

பார்ப்பனக்கழிவாய்
பார்ப்பன இந்துமதம்
அதை தலையில் சுமத்தும்
சாம தான் பேதம்

பணிய மறுக்கும்
 தலையை நோக்கி
பாய்ந்து வரும்        தண்டம்
!


அன்று       மனு நீதி
இன்று       உச்ச நீதி
 எட்டிப்பார்த்தால்        பீனல் கோடுகள்...
தொட்டுப் பார்த்தால்   பூணூல் கோடுகள்


பல்சருக்கும்
பாய் கொடுக்கும் சீதனத்துக்கும்
மதம் மாறுவது -  நாணயக்கேடாம்     
கேவலம்
அல்சருக்காக மதம் மாறிய
அப்பர் மட்டும் நாயன்மாராம்
வரலாற்றுப்பெருமை என்ன?
வயிற்று வலிக்காக மதம் மாறிய
கூன் பாண்டியன் சாதனை
சைவக் கொலைகள்

பறந்தது சமணத் தலைகள்

குத்தகை அளிக்க முடியாமல்
உழவன் குருதியில் நடுங்கிய வயல்வெளிகள்-
எத்திபிழைத்த பார்ப்பனருக்கோ
இனாமாக   ' இறையிலிகள் '
( வரி விலக்குபெற்ற ஊர்கள் பார்ப்பனருக்கு தானமாக அரசர்களால் கொடுக்கப்பட்டவை)

கதை கேட்டு கதை கேட்டு
வரலாறை இழந்தோமே
கதை கேட்டு கதை கேட்டு
வர்க்கத்தை மறந்தோமே !

பத்மாசுரன் நம் உறவாளி  !
நரகாசுரன் ஒரு போராளி  !
பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த
நம் பங்காளியை
பார்ப்பனீயம் தீர்த்துக் கட்டியதே- தீபாவளி!

அடப்பாவி!
"எம் தொல் குடியை அழித்தவனே "
என்று இதயம் சூடாகி
பார்ப்பன்நீயத் திற்கு எதிராய்
படை கட்டித் திரளாமல்..
நன்றிக்கடனை காட்டாமல்
காலைக்கடனும் கழிக்காமல்    
கொன்றவனை வணங்கி
இதயம் நல்லெண்ணையில்
 வடை தட்டி கொலை நாளை
வரவேற்கும் கேவலமே

கோபாவளி கொள்ளாமல்
தீபாவளி கொண்டாடும்
திராவிட அவமானம்

வரலாறு தெரியாது
அசுரன் என்றால்
நம்மையே
அருவருப்பாய் பார்க்கின்றாய் ... 

சு
ரா என்ற பார்ப்பன மதுவை கறாராக குடிக்க மறுத்த
திராவிடப் பிரிவே    அசுரா

முதலில்

சாராயம் குடித்த ஜாதி பார்ப்பன ஜாதி
முதலில்
சாராயம் காய்ச்சிய ஜாதியும்  பார்ப்பன ஜாதியே 

கூட்டுக்கறி தின்பவன்தான் பார்ப்பான் என்று
குழம்பவேண்டாம் யாரும்
முதலில்
மாட்டுக் கரிக்குழம்பு  கொதித்ததும்
ஆரிய பவன் தான் 

 புல மேயும் இளம் கன்றுக் குட்டியை
நம் பல் எப்பெடி மேயவேண்டும்   என்று
பாடி வைத்திருக்கிறான் யாக்ஞ்சவல்கியன்
அது  மனுதர்மமா?
 இல்லை  இல்லை
பார்பன ருசியின் மெனு தர்மம்

அவன் சாராயம் குடித்தால் அது தீர்த்தம்
நம்மா குடித்தால் நாத்தம்


இராமாயணம் மட்டுமல்ல
நாமும்
ஒரு முடிவுக்கு வருவோம்

ராமன் பாலம் ஒரு வாய் மொழி மோசடி
இந்து என்பது ஒரு வரலாற்று மோசடி
இந்து என்ற பெயரே
இஸ்லாமியர் வைத்தது
வெள்ளை ஏகாதிபத்தியம்
அதையே மதமாக படைத்தது

இந்துக் கடவுளைப் படைத்தவன் பார்ப்பான்
இந்து மதத்தை படைத்தவன் வெள்ளைக் காரன்
எப்படி?
இல்லை இல்லை என்பதிலிருந்து
உண்டானது இந்துமதம்

யாரெல்லாம் ... கிருத்துவர் இல்லையோ ?
 யாரெல்லாம் ... இசுலாமியர்  இல்லையோ?
யாரெல்லாம் ... பார்சி இல்லையோ ?
அவரெல்லாம் இந்து என்று ஆக்கியது
ஆங்கிலேய அரசியல் சட்டம் .

இன்னொரு பக்கம்
யாருக்கெல்லாம் இதயம் இல்லையோ
யாருக்கெல்லாம் மூளை  இல்லையோ
அவனே இந்துவாக இருக்க முடியும்
என்று
அம்பேத்கரும் பெரியாரும் அறைந்து கூறினர்

உனக்கு ஒரு குவளை தண்ணீர் தந்தா
ல்....
நீ தெருவில் நடந்தால் ... தீட்டு படும் என்று
சொந்த மக்களையே ஒதுக்கி வைக்கும்
இந்த மதம் ...

உனது பிறப்பையே வேசிமகன்   என்று
இழிவு படுத்தும்......இந்த மதம்   
இந்த இந்து மதம்   
உண் சொந்த மதமா?  என்று
பெரியாரும் அம்பேத்கரும்
சுரணை கொடுத்த இந்த மண்ணை
பார்ப்பன மல வண்டுகள்
அரிக்கப் பார்க்கிறது
போராடும் தலை முறையே  எச்சரிக்கை

"இந்துக்களே
ராமனுக்கு கோயில் கட்ட வாருங்கள் "
என்று கூப்பிடும் ராம கோபாலா 
இங்கிருக்கும் கோயிலுக்குள்  முதலில்
பஞ்சமரை கூட்டிப்போடா!

ராமர் பாலத்தை  பாதுகாக்க வாருங்கள்  என்று
ரூமர் கிளப்பும் ஏலே கணேசா
தேவாரத்தமிழில் நாங்கள்
தில்லையில் பாட வந்தால்
தமிழ் நீச பாஷை என்று பாடவிடாமல்
கபாலத்தை பிளக்கும் இனவெறி ஏனடா?

சாதியமே இந்து என்ற
சரித்திரத்தை பாரடா !

நாங்கள் இந்துவாக இருந்து
அனுபவிக்கும் கொடுமைகளை
இருந்து நீ அனுபவிக்க
அந்த ராமனோடு வாடா  
!
ஏ      ஸ்ரீராமா 
சின்ன ஜாதியில் பிறந்து
கவுண்டனிடம் மூத்திரம் குடிக்க
சீக்கிரமாய் வாடா  !

பன்றியாய் பிறந்ததனால்
நீ பலமுறை தின்றிருப்பாய்
இந்துவாகத் தோல் தட்டி
திண்ணியத்தில்
தேவர்சாதிப் பீ திங்க வாடா
!
ஈடுபட்ட ராம கோபாலா
எங்கேடா பி.ஜே பீ
கொடியங்குளத்தில் எங்கள் இந்துக் குடலை
சாதிவெறி உருவியபோது
எந்த சந்துக்குள்ளே ஒளிந்திருந்தே
சந்து கோபாலா 
!
 இப்ப இந்து இந்து இந்துன்னு
எங்களை ஏன் கூப்பிடுரே?
உன்குடலை உருவிக்காட்டிடுவோம்
ஒழுங்கைப் போடா!

மேல வளவு முருகேசு
வெட்டி சாய்க்கப்பட்டபோது
தட்டிக் கேட்க ஆளைக் காணோம் ...
எட்டிகூடப் பார்க்காத ஏலே இல. கணேசா
!
இப்ப ராமன் பாலம் காப்பாத்த
உன்கூட இந்துவாக வருவதற்கு
நாங்க என்ன லூசா?
எங்கே இந்த இனத்துக்காக
தேவர் சாதி வெறியை எதிர்த்து
பேசிப்பாரு லேசா?

காத்தவராயன் ஆரியமாலா
கதை இன்னும் முடியவில்லை
காதல் பண்ணிய கண்ணகியையும் 
காதலித்த தலித் முருகேசனையும்
கட்டாயமாக விஷம் வைத்துக்கொன்ற
வன்னிய சாதிவெறியை கண்டிக்க
எந்த முன்னணியையும் காணோம்

அந்த இந்துக்கக்களை காப்பாற்ற
எந்த ராமனையும் காணோம்!

சாதியமே  இந்துமதம்
எதிர்த்த குரல்களுக்கோ மரண பயம்
கேலிக்குரியதல்ல
பார்ப்பனீயம் பயன்கரத்துக்குரியது;
பயன்கரவாதத்திற்கென்று
 ஒரு மதம் இருக்கிறதென்றால்
அது பார்ப்பன இந்து மதம்
!

அடுப்பில் வருக்கப்பட்டது ஆசீவகம்
சட்டியில் சுருக்கப்பட்டது சார்வாகம்
கழுத்து முறிக்கப்பட்டது பவுத்தம்
கழுவில் ஏற்றப்பட்டது சமணம்
உயிருக்குபயந்து
காட்டுக்குள் ஓடினார்கள் சித்தர்கள்
நெருப்பில் பொறிக்கப்பட்டது சேரி   !

சாமி கும்பிடப்போன நந்தன்
சாம்பலாக வெளியே வந்தான்  !
குகைக்குள் போன பழனி போகர்
திரும்பவே இல்லை !
வரலாற்றில் ஒரு பார்ப்பான் கூட
ஜோதியில் கலந்ததே இல்லை   !?
பார்ப்பன படுகொலையில்
பயந்து ஓடின ஆறுகள்...
நடுங்கி அலறின காடுகள்....
பீதியில் இரைந்தன கடல்கள்...
உதிரத தெரிப்பில்
ஒடுங்கின மலைகள் ......
என்னகொடூரம்!
பார்ப்பனக் கவுச்சியில்
மூச்சு திணறிய
 காற்றும் சொல்லும்
 வர்ணாசிரம ரத்த வாடையை....

பார்ப்பான்  தவறு  செய்தால்   
மயிரே  போயிற்று                                     
சூத்திரன் தவறு செய்தால்
உயிரே போயிற்று

திரு 
ஞானசம்மந்தனுக்கு ஞானப்பால் ........
தீண்டத்தகாதவனுக்கு சாணிப்பால்.......
இதுதான் இந்துமதம்

தலை விதி என்று
எங்கள் உணர்வுககளை
ஒடுக்கியது பார்ப்பன்நீயம்
தாய் முலைக்கும் வரி போட்டு
எங்கள் உறுப்புகளையும்
ஒடுக்கியது சாதீயம்  !
இதுதான் இந்துமதம்  !

எங்கே பொதுவாய் இந்துமதம்?

சாதியிலும் சேர்த்தியில்லை
சாமியிலும் சேர்த்தியில்லை !
கல்லாய் சமைந்த நிலையிலும்
உழைக்கும் மக்கள் சாமி
வேட்டையாட வேல் கம்போடு
ஒரு உழைப்பில் இருக்குது !

உழைக்காத மேல் சாதி சாமியோ
சம்மணம் போட்டும் படுத்துக்  
கொ ண்டும்
அம்மண சிலைகள் சூழ
ஆறுவேளை திங்குது...........

கறியும் எலும்பும்
கள்ளும் சுருட்டும் எங்களைப்போலவே
எங்கள் சாமி கேட்குது  !
ஒரு தவறு செய்தது போல்
ஊருக்கு வெளியே.......ஒதுங்கி இருக்குது  !

நெய்யும்  பொங்கலும்

பொய்யும் களவும் கொண்ட
பார்பனச்சாமியோ
பக்கத்தில் இரண்டு
பொண்டாட்டி கேக்குது   !
இருந்தும்
வெக்கமே இல்லாமல்
ஊருக்குள் இருந்துகொண்டு
ஒரு கூத்தியாளும் தேடுது   !
 
நம்மை போலவே....நம்ப சாமி
கஞ்சோ கூழோ
காய்ச்சிக் குடிக்குது
ஆதிக்கச சாதி -    சாமி
வாழை இல்லை பொட்டு
வடை பாயாசம் கேட்குது !

இது சாமித்திமிரா?
 சாதித் திமிரா? 
நம்ம  மேல  சாமி  வந்தா
நாக்குல கம்பிய குத்துது !
பார்ப்பான் சாமி மேலவந்தா
பொய் அடுத்தவன வெட்டுது !

எனவேதான் சொல்கிறோம்
பக்தி என்ற பெயராலே
பார்ப்பான் பின்னே  செல்லாதே !
இந்து என்ற நினைப்பிலே
ராமன் பின்னே செல்லாதே !
 
எப்போதெல்லாம் நாம் இழிவு படுத்தப்படுகிரோமோ
அப்போதெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறது
 எப்போதெல்லாம் காவுகொடுக்கப் படுகிறோமோ 
அப்போதெல்லாம்
ராமனின்  நடமாட்டம் தெரிகிறது
காட் ஒப்பந்தம்
நாட்டை காவு கொண்ட நேரத்தில்
ராம ஜென்ம அர்ச்சனை
இன்று அணுசக்தி ஒப்பந்தம்
நாட்டை அடிமையாக்கும் வேளையில்
ராமன் பால பிரச்சினை
அணுசக்தி ஒப்பந்தமோ
நாட்டை மறு காலநியாக்குது
மனுசக்தி ஒப்பந்தமோ
நாட்டை  மீண்டும்
மனுதர்மமாக்குது
இரு முனையில் போராட
காலம்    கடமையை
நாம் மேல் சுமத்துது

காரியம் நடக்க
ராமன் கதை விட்ட ஆரியம் இப்போது
தோரியம் கெட்டுவிடும் 
தோண்டாதே என்கிறது
தோரியம் இல்லை - அங்கே
ஆரியம் கெடுகிறது என்று
ஆர் .எஸ். எஸ்  அடிவயிறு எரிகிறது

எய்ட்ஸ்   ஆர் .எஸ். எஸ்
இரண்டும்  ஆபத்து
உள்ளுக்குள் விட்டால் உயிரின் எதிர்ப்பு குறைந்துவிடும்
உள்ளே விட்டதனால் இதோ
உருக்குலைந்து தமிழ் நாடு
பிராணவாயுவை சுவாசித்து
ஆரியமில வாயுவை
அடிவாயில்  போற்றி
மேலவையில் அபே-ஓம் விட்டு
பார்ப்பன  மலத்தை
இதயத்தில் பிசையும் தமிழகமே

நாம் நதிக்கரை எங்கும் பார்ப்பனப் பாசி
நாம் ரத்தமெல்லாம் பார்ப்பன சீழ்
பனி கடுமையானது
ஆற்றையே அடித்து துவைக்க வேண்டும் நாம்-
ஏறத்தத்தையே கழுவித் துடைக்க வேண்டும் நாம்!

அந்தப்பக்கம் போனால்
ஆளைப் பிடித்திழுக்கும் - அமிர்தானந்தமயி
தப்பித்து வெளியே வந்தால்
 எத்திக்கும் பிரம்ம குமாரிகள்
வாழ்நிலைப  போராட்டங்களை
திசை திருப்பும்
ஆழ் நிலை தியானங்கள்...
வர்கப் போராட்டத்தை திசை திருப்பும்
வாழும் கலை வல்லுனர்கள்...
வர்க்கக் கோபத்தை அடக்கும் 
பேலும் கலை பிராணாயாமங்கள்
இத்தனைக்கும் மத்தியில்
அதிகாரத்தை பிடிக்க எத்தனிக்கும்  ராமன்

இப்போது நடப்பது
அரசியல் ராமாயணம்
இதில்-
சீதைக்கு ஜெயலலிதா சக்களத்தி
அனுமாருக்கு சூ அண்ணன் முறை
சுக்ரீவனுக்கு விஜயகாந்த் சொந்தத் தம்பி
விபீடனுக்கோ வை. கோ  உடன் பிறப்பு!
 இப்போது வருபவன் தசரதனுக்கு பிறந்த ராமனல்ல
இவன்
தாராளமயம் -தனியார்மயத்துக்குப் பிறந்த ராமன்

அன்றைக்கு
அந்நிய ராமன்
எங்கிருந்தோ வந்து
இங்குள்ள சுக்ரீவன்  விபீடணனை வைத்து
பொண்டாட்டிக்குப  பாலம் கட்டியது போல....
இன்றைக்கு
அந்நிய அமெரிக்க ராமன்
இங்குள்ள ஒட்டுக் கட்சி
விபீடனர்களை  வைத்து
மன்மோகன்  அனுமாரை வைத்து...
பாலம் கட்டுவதும்
தங்க நாற்கரச் சாலை அமைப்பதும்..
 தட்டிக் கேட்கும் தொழிலாளர்களை
கழுத்தை வெட்டுவதும்...
தொழிற்சங்க உரிமைகளின்
மூக்கை அறுப்பதும் தொடர்கிறது..

ஆக்கிரமித்த ராமனைப் போல
நமது விவசாயத்திற்குள்ளே நுழைந்து
விவசாயிகளை  அழிக்கிறான்;
தொழில் துறையில் நுழைந்து
 தொழிலாளர்களை விரட்டுகிறான்

உழைத்து வாழும் மக்களை

 உழைத்து வாழ வேலையின்றி
உண்ணச் சோறின்றி
ஒதுங்க இடமுமின்றி-
உலக மய காண்டீபத்தால்
கொலை செய்யும்
 அந்நிய அமெரிக்க ராமன்களோடு
இந்த அயோத்தி ராமனையும்
சேர்த்து முடிப்போம்!

இனியும் தொடரக்கூடாது
இந்த இழிவுகளின் ராமாயணம்...
நரகாசுரனால்.... பத்மாசுரனால்....
ராவணனால்...முடியாததை
நக்சல்பாரிகள்
முடித்துவைப்பார்கள்...
சமூகவிதிப்படி சாதித்தே தீரும்
பாட்டாளி வர்கத்தின் அசுரபலம்
இந்த ராமாயணத்தை முடித்து வைக்கும்!
..

Send free SMS to your Friends on Mobile from your Yahoo! Messenger. Download Now! http://messenger.yahoo.com/download.php

Read more...

புதன், 14 ஏப்ரல், 2010

பாபர் மசூதி இடிப்புக்கு பகிரங்க மன்னிப்புக் கேட்கத் தயாரா?



மன்னிப்பு கேட்பாரா நிதின்கட்காரி?

பாரதீய ஜனதா கட்சியின் புதிய தலைவராக வந்துள்ள நிதின் கட்காரி, தாம்
தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டபின், முதன்முதலாகத் தமிழ்நாட்டிற்கு
வந்து சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
காங்கிரசிற்குப் பல சவால்களையும் விடுத்துள்ளார். அது குறித்து
சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.


அதே நேரத்தில் வேறு சில கருத்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

(1) தீவிரவாதத்திற்குக் காங்கிரஸ் துணை போகிறது. பயங்கரவாதத்தின்மீது
மென்மையான போக்கினைக் காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது என்று குறிப்-
பிட்டுள்ளார்.

பொதுவாக தீவிரவாதத்தைப் பற்றியோ, பயங்கரவாதத்தைப் பற்றியோ பாரதீய ஜனதாக்
கட்சியோ, அதன் சங் பரிவாரத்தைச் சேர்ந்த எந்த ஒரு அமைப்போ பேசிட,
கருத்துகள் கூறிட தகுதி உடையவைதானா என்பது மிகவும் முக்கியமான
வினாவாகும்.

அவர்கள் தூக்கி நிறுத்த விரும்பும் இந்து மதத்தின் கடவுள்களே கூட
பயங்கரவாதத்தின் சின்னங்கள்தாம். ராமன் கையில் இருக்கும் வில்லும்
அம்பும், பரசு-ராமன் கையில் கொடுக்கப்பட்டுள்ள கோடரியும், சிவபெருமான்
கையில் உள்ள சூலாயுதமும், மகா-விஷ்ணு-வின் கையில் அலங்கரிக்கும் சங்கு
சக்கரமும், சுப்பிரமணியனின் கையில் உள்ள வேலும் அகிம்சையின் சின்னங்களா?
அமைதியின் தூதுவர்களா என்ற கேள்விக்கு முதலில் பதில் சொல்லியாகவேண்டும்.

இந்துக்கடவுள்கள் சண்டை போட்டிருக்கின்றன. மனிதர்களைக் கொலை
செய்திருக்கின்றன. தலைகளை சீவியிருக்கின்றன. பெண்களைக் கற்பழித்து
இருக்கின்றன. பஞ்சமா பாதகங்கள் என்று சொல்லப்படும் அத்தனைப் பழிகளையும்
இந்துக் கடவுள்கள் செய்திருக்கின்றன. இவற்றை அவர்களால் மறுக்க முடியுமா?

(2) பாரதீய ஜனதா, சங் பரிவார் கூட்டம் நாளும் நாட்டில் மதக்
கலவரங்களுக்குக் கத்தியைத் தீட்டி வருகின்றன. பல இடங்களிலும் நடந்துள்ள
மதக் கலவரங்களுக்கு இந்த அமைப்புகள்தாம் காரணம் என்று அதிகாரபூர்வமான
ஆணையங்கள், ஆதாரபூர்வமான கருத்துகளைத் தெரிவிக்கின்றன.

காந்தியார் படுகொலை எந்தப் பின்னணியில்? கான்பூர் கலவரம், மகாராட்டிர
மாநிலத்தில் சிமி அலுவலகமுன் குண்டு வெடிப்பு (பெண் சாமியார்கள்வரை
சிக்கவில்லையா?) சங் பரிவார் கும்பலின் தொடர் வன்முறை நடவடிக்கைகளை
அம்பலப்படுத்தவில்லையா?

இராணுவ அதிகாரிகளே சம்பந்தப்பட்டிருந்தனரே! இராணுவத்தில் மட்டுமே
பயன்படுத்தப்படும் ஆர்.டி.எக்ஸ். மற்றும் அம்மோனியம் நைட்ரேட் வெடி
மருந்து எப்படி வெளியில் வந்தது? இராணு-வக் கல்லூரியில் வைத்தே
வன்முறையாளர்கள் தயாரிக்கப்பட்டனரே! மாலேகான் குண்டு வெடிப்பின்
பின்னணிக் கர்த்தாக்கள் யார்?

இந்து ராஜ்ஜியத்தை ஏற்படுத்த இசுரேல் வரை இவர்களின் கைகள் நீண்டு இருந்த
தகவல்கள் எல்லாம் வெளியே வரவில்லையா?

குஜராத் மாநிலத்தில் அரச பயங்கரவாதமாக சிறுபான்மை மக்கள் கொன்று
குவிக்கப்பட்டனரே. யார் காரணம்? பின்னணி என்ன? உச்சநீதிமன்றமே நீரோ
மன்னன் என்று நரேந்திர மோடியை விமர்சித்ததன் காரணம் என்ன?

மூவாயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணமாக இருந்தவர்களா
பயங்கர வாதத்தைப் பற்றிப் பேசுவது?

இஸ்லாமிய மக்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியை பட்டப்பகலில்
கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், கோடரிகளையும் எடுத்துச் சென்று
பா.ஜ.க. தலைவர்கள் முன்னிலையிலேயே அடித்து நொறுக்கித் தரை
மட்டமாக்கினார்களே! அந்த பா.ஜ.க.வின் தலைவர் பயங்கரவாதம் பற்றிப் பேசத்
தகுதி உடையவர்தானா?

அந்தக் கொடுமைக்காக இதுவரை பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதுண்டா? மாறாக
நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும்? என்று கொஞ்சம்கூட நாகரிகமின்றிக்
கொக்கரித்தவர் யார் தெரியுமா?

சென்னைப் பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க.வின் புதிய தலைவர் நிதின் கட்காரி,
தமது வழிகாட்டிகள் என்று கூறிய தலைவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள
சாட்சாத் அதே அத்வானிதான்.

அது போகட்டும்! காலங்கடந்தாவது புதிய தலைவர் பாபர் மசூதி இடிப்புக்கு
இப்பொழுதாவது பகிரங்க மன்னிப்புக் கேட்கத் தயாரா? அப்படி மன்னிப்புக்
கேட்டுவிட்டு, பயங்கரவாதம்பற்றிப் பேச ஆரம்பிக்கட்டும்.

அப்படி அவர் மன்னிப்பு கேட்டால், மறுகணமே அவர் பதவியை ஆர்.எஸ்.எஸ்.
பறிமுதல் செய்து விடும் என்பது அவருக்கே தெரியுமே!

---------------"விடுதலை” தலையங்கம் 13-4-2010

Read more...

வியாழன், 1 ஏப்ரல், 2010

ஊர்வாசியும், அயல்வாசியும்....

கோவையில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை எதிர்த்து இந்துமக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

-செய்திப்பற்றிய உரையாடல் .

ஊர்வாசியும், அயல்வாசியும்
அயல்வாசி:ஏம்பா அங்கே என்னக்கூட்டம்?

ஊர்வாசி:யோவ்! ஆறேழு பேர் நிக்கறதெல்லாம் ஒரு கூட்டமாய்யா?

அயல்வாசி:சரி சரி விடுப்பா! என்ன சேதியாம்?

ஊர்வாசி:அதான் வேலவெட்டியில்லாத பயலுக ஏதாவது பிரச்சனையை கிளப்பணும்னு ஆர்ப்பாட்டம்னு கிளம்பிட்டானுக.

அயல்வாசி:விஷயத்துக்கு வாப்பா? ஊர்வாசி:அதான் நம்ம சானியா மிர்சா தெரியும்ல?

அயல்வாசி:ஆமாம், பந்தாட்டமெல்லாம் ஆடுமே அந்தப்பொண்ணா?

ஊர்வாசி:ஆமாம்!அந்தப்பொண்ணு கல்யாணம் பண்ணிக்க போகுதாம்

அயல்வாசி:அடப்பாவிகளா! கல்யாணம் முடிப்பது தப்பா?

ஊர்வாசி:யோவ் அவசரப்படாதே!விஷயத்தைக்கேளு!அந்தப்பொண்ணு முடிக்கப்போறது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரு சோயப்.

அயல்வாசி :ஓஹோ! அதான் பிரச்சனையா?ஆமாம்! அந்தப்பொண்ணு சம்மதத்தோடத்தானே இந்தத்திருமணம் நடக்கப்போகுது?

ஊர்வாசி :அவங்க ரெண்டு பேருக்கு 7 வருசமா பழக்கமாம்.ரெண்டு வீட்லயும் சம்மதிச்சுட்டாங்க.

அயல்வாசி :அப்ப இவனுக எதுக்கு இப்படி ஆர்ப்பாட்டம் பண்றானுக!

ஊர்வாசி :இந்தப்பயலுகளுக்குத்தான் தேசப்பக்தி ரொம்பக்கூடிப்போச்சே!

அயல்வாசி:அதுசரி!முன்னாடி இந்தப்பொண்ணு அரைகுறை ஆடையில டென்னிஸ் ஆடுவது இஸ்லாத்துக்கு முரணானது என்று ஃபத்வா கொடுத்தப்ப இவனுக எல்லாம் ஆடை அணிவது அந்தப்பொண்ணுக்க உரிமை அதில் எல்லாம் மதம் தலையிடக்கூடாதுன்னு வக்காலத்து வாங்கினார்களே!கல்யாணத்துக்கு மாப்பிள்ளையை மட்டும் செலக்ட் பண்ண அந்தப்பொண்ணுக்கு உரிமையில்லையா?

ஊர்வாசி:யோவ்! என்னட்ட கேட்டு என்ன பிரயோசனம் !அவனுக கிட்டப்போய் கேளு!

அயல்வாசி:அது சரி அவனுக யாருன்னு சொல்லலையே நீ?

ஊர்வாசி:பார்த்தா தெரியல! அதான் நித்யானந்தா சாமிக்க அசிங்கமெல்லாம் சன் டிவியில ஒளிபரப்பானப்ப ஆ ஊன்னு கத்தி களேபரம் பண்ணிட்டு இவங்க முன்னாள் தல அதான் ராமகோபால அய்யரு நித்யானந்தா ஹிந்துமதத்துக்கு சேவை செஞ்வரு அதனால கம்னு கிடங்கய்யானு சொன்னதும் காணாமப்போன இந்து மக்கள் கட்சிக்காரனுக இவனுக.

அயல்வாசி:அப்படியா?சரி இவங்க குடும்ப கட்சியான பா.ஜ.க வின் முன்னாள் தலைவரு அதான் நம்ம இரும்பு மனுஷன் அத்வானி பாகிஸ்தான் சிந்துவிலிருந்து இந்தியா வந்து நம்ம பொண்ணையல்லவா கல்யாணம் பண்ணிக்கிட்டாரு! அவருக்குத்தானே இவனுக பா.ஜ.க தலைவர், துணை பிரதமர், உள்துறை அமைச்சர் என பதவியை அள்ளிக்கொடுதானுக! சானியாவுடைய பதக்கத்தை பறிக்கணூம்னா அத்வானி வகித்த இந்தப்பதவிகளையும், அனுபவித்த பதவி சுகங்களையும் எப்படி பறிக்கிறது?

ஊர்வாசி:யோவ்! நீ எங்கேயோ கையை வைக்கிற! கப்சிப்னு இரு! நமக்கெதுக்கு வம்பு!

அயல்வாசி:அதுசரிதான்!உண்மையைச்சொன்னா நம்மளயும் ஐ.எஸ்.ஐ ஏஜண்டுனு சொல்லுவானுக! அந்துலேயை சொன்னதுபோல!

-பாமரன்

Read more...

சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் மோடி!

http://beta.thehindu.com/multimedia/dynamic/00004/MODI_4292e.jpg

இந்திய வரலாற்றில் முதன் முறையாக பதவியில் இருந்து கொண்டே ஒரு முதலமைச்சர் விசாரணைக் குழுவின் முன்பாக, அதுவும் இந்தியாவின் நீதிபரிபாலன அமைப்பின் உச்சம் என வர்ணிக்கப்படும் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப்புலனாய்வுக்குழுவின் முன் பாக நேர்நின்றார் ஒருவர். யார் அவர்?

இந்திய அரசியல் வரலாற்றில் பல்வேறு அவப்பெயர்களை அடுக்கடுக்காக பெற்ற குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தான் இந்த அரும்பெரும் பெருமைக்கு சொந்தக்காரர்.

1. அதிகாரிகளை கடமைகளை செய்ய வேண்டாம் என கட்டளை யிட்ட குற்றம்.

2. இனப்படுகொலைக்கு சூத்ர தாரியாக இருந்தது.

3. கொலைகாரர்களை தண்டிக் காததோடு அரவணைத்த அக்கிரமம்.

4. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி, நிதி, நிவாரணம் போன்ற வற்றிற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்காத இந்த 59 வயது முன்னணி பா.ஜ.க தலைவர், 27-3-2010 அன்று அகமதாபாத்தில் பழைய தலைமைச் செயலக கட்டிட வளாகத்திற்குள் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன்பாக நேர் நின்றார்.

காங்கிரஸின் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட 69பேர் குல்பர்க் மாளிகையில் படுகொலை செய் யப்பட்ட நிகழ்வு தொடர்பாக மோடி விசாரணைக் குழு முன்பாக நேர் நிறுத்தப்பட்டார்.

69 பேர் படுகொலை செய்யப்பட்ட குற்றச் செயல் தொடர்பாக மோடியை நோக்கி 68 கேள்விகள் சரமாரியாக வீசப்பட்டதாக ஷிமிஜி வட்டாரம் தகவல்கள் தெரிவித்தன.

அதில் 62 கேள்விகளுக்கு மட்டும் அவர் விடையளித்ததாகவும் மொத்தம் 10 மணிநேரம் பதிலளித்த அவர் மிகவும் சோர்வடைந்ததாகவும் என்.டி. டி.வி செய்தியாளர் கூறினார்.

தங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என தான் நம்புவதாக படுகொலை செய்யப்பட்ட இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவியார் ஜாகியா ஜாஃப்ரி தெரிவித்தார்.

நீதியை முடக்கும் விதமாக இதுவரை நடந்து வந்த மோடியை விசாரணைக் குழுவின் முன்பாக நேர் நிறுத்தப்பட்ட நாள் இந்திய ஜனநாயகத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் முக்கியமான நாள் என சமூக நல ஆர்வலர் தீஸ்தா செதல் வாட் தெரிவித்தார்.

விசாரணைப்படலத்தில் சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் ஆர்.கே.ராகவன் பங்கேற்கவில்லை. விசாரணைக்குழுவின் அதிகாரியான ஏ.கே. மல்ஹோத்ரா இந்த குறுக்கு விசாரணைக் குழுவிற்கு தலைமை ஏற்றார்.

குஜராத் கலவரம் இனப்படு கொலை குறித்து சரமாரி வினாக்கள் வீசப்பட்டாலும் மோடியின் பதில்கள் குறித்த விவரங்கள் அனைத் தும் உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக் கப்பட்டுள்ளது.

மோடி விசாரணைக்குழு முன்பாக நேர்நின்றதற்கு மறுநாள் (மார்ச் 28, 2010) குஜராத் சட்டப்பல்கலைக் கழகத்திற்கு பட்டமளிப்பு விழா வில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், ஜிம்பாப்வே நாட்டின் நீதிபதி அஹ்மத் மூஸா இப்ராஹீம் ஆகிய இருவருடன் இனப்படுகொலை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மோடியும் ஒரே மேடையில் சேர்ந்து கலந்து கொள்வது குறித்த சமூக நலஆர்வலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தால் நவீன நீரோ மன்னன் என குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபருடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒன்றாக விழாவில் பங்கேற்பது ஏற்புடைய ஒன்றா? என அவர்கள் வினா விடுத்துள்ளனர்.

மோடியோடு சேர்ந்து நிகழ்ச்சி களில் பங்கேற்க வேண்டாம் என இந்தியா மற்றும் ஜிம்பாப்வே நீதிபதிகளுக்கு இஹ்சான் ஜாஃப்ரியி மகள் ஜுபேர் ஜாஃப்ரி விடுத்த வேண்டுகோளும் விழலுக்கு இறைத்தநீராயிற்று.

Read more...

திங்கள், 1 மார்ச், 2010

இளைஞனே திருப்பிப் பார்!

கட்டிய மஞ்சள் கயிறின் வாசனை
மாறும் முன்னே -
கட்டியவளை கண்ணீரில் கரைத்து விட்டு
கடனடைத்து காடு கரை வாங்கி சேர்க்க,
கடல் கடந்து நாடு கடந்து
கட்டியவளை நினைத்து கட்டிலுக்கு முத்தமிட்டு
தலையணையை கட்டிக் கொண்டு உறங்குகிறாயே!

கோடிகோடி கட்டி தங்கங்களை கொட்டினாலும்
நீ வாழ மறந்த
வசந்தகால வாழ்க்கை கிடைக்குமா?

பணம் எனும் உணவு தேவைதான் - ஜீரணிக்கிறேன்
வாழ்க்கை எனும் உடலே இல்லையெனில்
உணவு எனும் பணம் உபயோகப்படாதே?

இளைஞனே!
திருப்பிப் பார்!
நீ அனுபவிக்க மறந்த
உன் வாழ்க்கை பாதச் சுவடுகளை

Read more...

புதன், 10 பிப்ரவரி, 2010

ஜெயராம் மட்டும்தான் பெண்களை அவமானப்படுத்தினாரா?

பிரபல நடிகர் ஜெயராம் நடித்த 'ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' என்ற மலையாள படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இ‌ந்த பட‌‌த்‌தி‌ல் வீட்டு வேலைக்காரப் பெண்ணை ''சை‌ட்'' அடிப்பது போல் காட்சிகள் உள்ளன.

இந்நிலையில் ஏசியா நெட் தொலைக்காட்சியின் 'டாக் ஷோ'வில் பங்கேற்ற ஜெயராமிடம், இது பற்றி குறிப்பிட்டு நிஜ வாழ்க்கையில் நீங்கள் வேலைக்காரியை சைட் அடித்து இருக்கிறீர்களா? என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார்.

அதற்கு பதில் அளித்து ஜெயராம் கூறும்போது, என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி, போத்து (எருமை) மாதிரி இருப்பாள்; அதைப்போய் எப்படி சைட் அடிக்க முடியும் ? " என்றார்.இது அந்த தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் ஒளிபரப்பானது.”(வெப்துனியா)

மேற்கண்ட செய்தி பரவியதும் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. அவருடைய வீடும் தாக்கப்பட்டது. அதை தொடர்ந்து “நாம் தமிழர்” இயக்கத்தை சார்ந்த தோழர்கள் 16 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக செய்திகளும் வெளியாகியிருக்கிறது. அதோடு நிற்காமல் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் மீது கைது நடவடிக்கை ஏவப்பட உள்ளதாகவு மேற்கொண்டு செய்திகள் தெரிவிக்கின்றன(நாம் தமிழர் இணையம்)

பின்னர் சூழலின் தீவிரத்தை உணர்ந்து நடிகர் ஜெயராம் மன்னிப்பு கேட்டார்.............
ஜெயராம் மீதும் வழக்குப்போடப்பட்டிருப்பதாக செய்திகளை இணையங்களில் கண்டோம்....

நடிகர் ஜெயராமின் அந்த கேவலமான சொற்கள் கண்டிக்கத்தக்கவைதான்.......ஆனால் , ஜெயராம் மட்டுமா கண்டிக்கத்தக்கவர்.......

மேற்கண்ட நிகழ்வுகள் குறித்து நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்த விடயங்களை என் புரிதலுக்குட்பட்டு சில கருத்துக்களை இங்கே பதிவு செய்கிறேன்..... -- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நம் தமிழ் இளைஞர்கள், தமிழ்தாய்மார்கள் மீது அளவில்லா மதிப்பு வைத்திருக்கிற இனவுணர்வுள்ள இளைஞர்கள் வரவேற்கும் அதே வேளையில், மேற்கொண்டும் பெண்களை இழிவுப்படுத்தும் போக்கை கடைபிடிக்கு மற்ற துறைகளையும் கண்டித்து, எதிராக களம் காண வேண்டிய தேவையிருக்கிறது............

பெண்களை இழிவுப்படுத்தும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டு பெண்களை இழிவுப்படுத்தும் முன் சிந்தித்து சொற்களை உதிர்ப்பார்கள் என்று அந்த நடிகரிடம் மட்டுமல்ல சமூகத்தில் வாழும் சாமானிய மனிதன்வரை எவனிடமும் நாம் எதிர்ப்பார்க்கவில்லை...ஏனென்றால் அவர் சார்ந்திருக்கும் துறை அத்தகையது. ஆணாதிக்க துறை(சமூகம்).

திரை ஊடகம்

பெண்களை இழிவுப்படுத்துவதில் இன்று வலுவான முதல் ஊடகம் இதுதான். பெண்ணின் அங்கங்களை சமூகத்தில் காட்சி பொருளாக்கி விற்பதில் முதலிடத்தில் இருப்பது இதே ஊடகம்தான்.....

பெண்களின் உடலில் ஏற்படும் இயற்கையான மாற்றத்தை

“சக்கரவள்ளி கிழங்கு நீதான் சமஞ்சது எப்படி” “மாசி மாசம் ஆளான பொண்ணு” என்று பெண்ணின் உடலை கூவி விற்கும் பாங்கு........

“சின்னவீடா வரட்டுமா? பெரிய வீடா வரட்டுமா?”என்று வீடு கட்டி ரியல் எஸ்டேட் பாணியில் விற்றது............

“டேடி மம்மி வீட்டில் இல்லை, தடை போட யாருமில்லை............(வில்லு)”என்று வரம்புமீற அழைப்பது............(இதில் கொடுமை என்னவென்றால் 5 வயது குழந்தைகள் பள்ளிக்கூட விழாக்களில் இதே பாடல்களுக்கு ஆடுகின்றனர்)

“பள்ளிக்கூட ஸ்நேகம், பள்ளியறை பாய் வரை போகும் யோகம்” (குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்)

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்குறியே என்று பெண்ணுக்கு உடை உடுத்த பாடம் எடுத்ததுவரைக்கும்.........

கருத்துள்ள(?) பாடல்களை தந்து பெண்களை இழிவுப்படுத்துவதில் ஜெயராமுக்கு முன்னோடிகள், நம் திரை கண்ணாடிகள்...........

பாடல்களில் மட்டும்தானா என்றால் வசனங்களில் இவர்களின் ஆபாசத்துக்கு, ஆணாதிக்க வக்கிர புத்திக்கு அளவில்லை...

பொம்பளை சிரிச்சா போச்சு...........

நான் நினைச்சா ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண்ணோட வாழ்வேன்( பிரியமானவளே)

அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோபப்படுற பொம்பளையும் வாழ்ந்ததா சரித்திரமில்லை..........

என்று கோபப்படுவதற்கு கூட ஆண் என்ற அடையாளத்துக்கு பட்டாஎழுதும் திரைத்துறையை கண்டித்தும்...........

சின்னத்திரை ஊடகங்கள்
பெண்ணை வக்கிர புத்திக் கொண்டவளாக, கண்களின் க்லிசரின் சுரப்பிகள் தொடர்ந்து சுரந்து கொண்டிருக்கும் பிறவிகளாக, சித்தரித்து உருவாக்கப்படும் குறும்(?), நெடுந்தொடர்கள் ஆகியவற்றிற்கு எதிராக..............

விளம்பர படங்கள்

விளம்பர படங்கள் என்ற போர்வையில்

தமிழ்நாட்டு பெண்களின் உள்ளத்தில் கருப்பு கீழானது என்று உளவியல்ரீயாக தாழ்வு மனப்பான்மையை விதைக்கும் முகப்பூச்சு விளம்பரங்கள் தொடங்கி..........ஆணின் உள்ளாடை விளம்பரத்துக்கு கூட பெண்ணை உள்ளாடையோடு நடமாடவிட்டு இளைஞர்களின் உள்ளத்தின் பெண்ணின் மீதான வக்கிர சிந்தனையை தூண்டிவிடும் விளம்பர நிறுவனங்களை கண்டித்தும்.............

களமிறங்க வேண்டிய கொள்கை தெளிவு நம் இளைஞர்களுக்கு வர வேண்டும்......

ஆனால், ஆணாதிக்க பிற்போக்கு தனத்திற்கு இந்த ஊடகங்கள் மட்டும்தான் காரணமா? மக்களுக்கேற்ற மகேசன் போல, ஆணாதிக்க சமூகத்தின் பிம்பமாகவே நிலவும் இந்த ஊடகங்களை கண்டித்து களமிறங்கும் நாமும் நம்மை கொஞ்சம் ஆய்வு செய்து கொள்ள வேண்டாமா?

ஒரு ஆணும், ஆணும் சண்டையிட்டு கொள்ளும் பொழுது வசைப்பாட பயன்படுத்தப்படும் கொச்சையான சொற்கள் ஏதாவது ஆணை திட்டுவதாக வருகிறதா? வசைப்பாடும் ஆண் எதிரிலிருக்கும் ஆணின் சகோதரி, தாய், மனைவி என அவர்களைத்தான் திட்டி தன் ஆண்மையை(?) நிருபிக்கிறான். இதுதானே நம் வழக்காக இருக்கிறது...

எ.கா:ஆணின் துணிவை உரசிப்பார்க்க..........ஆணை போடா பொட்டை என்று திட்டினால் போதும்...உடனே இவருக்கு துணிவு பொத்துக் கொண்டு வந்துவிடும்....(சமூகத்தில் தாழ்ந்த சாதியாக கருதப்படுகிற சாதியின் பெயரை கொண்டு திட்டினால் எப்படி சாதிய திமிரோடு ஆதிக்கசாதியாக கருதிக் கொள்ளும் அன்பர்களுக்கு கோபம் வருகிறதோ, அதே சூழலை இங்கே பொறுத்தி பார்த்தால் தவறில்லை என்று நினைக்கிறேன்)

ஆக, நாம் எதிர்த்து களமாட வேண்டியது விரிவான பார்வையில்.................பெண்களின் கருத்துக்களுக்கும் கொஞ்சம் செவிப்படுத்து,

நம் இளைஞர்கள் நடுவில் நிலவும் ஆணாதிக்க பிற்போக்குத்தனத்தை



மாற்றிக் கொள்ளாமல்............ஜெயராம் போன்ற பிரபல ஆணாதிக்க பிற்போக்குவாதிகளை கண்டிக்கும் தகுதி நமக்கு உண்டா?

ஊரை திருத்துவதற்கு முன் நாம் கொஞ்சம் நம்மை திருத்துவோம்.........

பெண்களை நுகர்வு பாண்டமாக கருதுவதை ஒழித்து சக மனுசியாக பார்க்க பழகுவோம்...

தமிழின ஜெயராம்களையும் கொஞ்சம் கவனித்தில் கொண்டு திருத்த முயல்வோம்

---------------------------------------------------------------------------------------------------
அதோடு நாம் இங்கே நம் தமிழ் உணர்வாளர்கள், தமிழச்சிகளுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அவமானத்தையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்......

இந்த இணைப்பை அழுத்திப்பாருங்கள்
http://thatstamil.oneindia.in/news/2010/02/07/lack-communication-skill-grounds-sc.html
பெண்கள் கருப்பானவர்கள், குட்டையானவர்கள் என்று சொல்லி விமானப்பணிப்பெண் நேர்காணலின்பொழுது நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள்...........இது தமிழச்சிகளுக்கு நேர்ந்த அவமானமில்லையா?
வெள்ளைத்தோல்தான் அழகு என்று கருதிக் கொண்டு எம் இன பெண்களை இழிவுப்படுத்த இந்த பண்டார கூட்டத்திற்கு எவன் கொடுத்தது அதிகாரம்....

ஆப்ரிக்க நாட்டில் நிறத்தை அடிப்படையாக கொண்டு அவர்கள் யாரையும் விமான பணிப்பெண் வேலைக்கு நிராகரிக்கிறார்களா, என்ன?

Read more...

About This Blog

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP